பிரதமர் அலுவலகம்
பீகார் மாநிலம் பூர்னியாவில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களின் தொடக்க விழாவில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
Posted On:
15 SEP 2025 7:26PM by PIB Chennai
பாரத் மாதா கி – ஜெய்!
பாரத் மாதா கி – ஜெய்!
பீகார் மாநில ஆளுநர் திரு ஆரிஃப் முகமது கான் அவர்களே, முதலமைச்சர் திரு நிதீஷ் குமார் அவர்களே, மேடையில் வீற்றிருக்கும் மற்ற மதிப்பிற்குரிய பிரமுகர்களே, என் அன்புள்ள சகோதர சகோதரிகளே!
உங்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகள். பூர்னியா என்பது புரண் தேவியின் நிலம், பக்த பிரகலாத்தின் நிலம், மற்றும் மகரிஷி மேஹி பாபாவின் பணித்தளம். இந்த மண் ஃபனிஷ்வர் நாத் ரேணு மற்றும் சதிநாத் பதுரி போன்ற நாவலாசிரியர்களையும் தோற்றுவித்துள்ளது. இது வினோபா பாவே போன்ற 'கர்மயோகிகளின்' 'கர்மபூமி'. இந்த புனித நிலத்தை நான் மீண்டும் மீண்டும் வணங்குகிறேன்.
நான் தொடங்குவதற்கு முன், உங்கள் மன்னிப்பைக் கேட்கிறேன். எனது நிகழ்ச்சி கொல்கத்தாவில் நீடித்தது, அதன் விளைவாக நான் இங்கு வர தாமதமாகிவிட்டது. இருந்தபோதிலும், இவ்வளவு பெரிய எண்ணிக்கையில் நீங்கள் என்னை ஆசீர்வதிக்க இங்கு வந்துள்ளீர்கள், இவ்வளவு நேரம் காத்திருந்தீர்கள், உங்களுக்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவிக்கிறேன். மேலும் மீண்டும் ஒருமுறை, தாமதமாக வந்ததற்கு மன்னிப்பு கேட்டு மக்களின் பாதங்களில் பணிகிறேன்.
நண்பர்களே,
இன்று, பீகாருக்கான சுமார் 40,000 கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் தொடங்கி வைக்கப்பட்டு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளன. ரயில்வே, விமான நிலையங்கள், மின்சாரம் மற்றும் தண்ணீர் தொடர்பான இந்த திட்டங்கள் சீமாஞ்சலின் கனவுகளை நிறைவேற்ற உதவும். இன்று, பிரதமரின் ஆவாஸ் யோஜனாவின் கீழ் 40,000-க்கும் மேற்பட்ட பயனாளிகள் பக்கா நிரந்தர வீடுகளைப் பெற்றுள்ளனர். இன்று இந்த 40,000 குடும்பங்களுக்கு புதிய தொடக்கமாகும். தன்தேராஸ், தீபாவளி மற்றும் சத் பூஜைக்கு முன்பாக நிரந்தரமாக வீடு கிடைத்து உங்கள் சொந்த வீட்டிற்குள் நுழைவது உண்மையில் ஒரு ஆசிர்வாதமாகும். இந்த குடும்பங்களுக்கு நான் நல் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
நண்பர்களே,
இன்றைய நிகழ்வு எனது வீடற்ற சகோதர சகோதரிகளுக்கு உறுதியளிப்பதாகவும் உள்ளது. அவர்களுக்கும் நிரந்தரமாக வீடு கிடைக்கும் நாள் வரும், இது மோடியின் உத்தரவாதம். கடந்த 11 ஆண்டுகளில் எங்கள் அரசு ஏழைகளுக்காக 4 கோடிக்கும் மேற்பட்ட நிரந்தரமான பக்கா வீடுகளை கட்டி வழங்கியுள்ளது. இப்போது, நாங்கள் மேலும் 3 கோடி வீடுகளை கட்டும் பணியில் ஈடுபட்டுள்ளோம். ஒவ்வொரு ஏழைக்கும் நிரந்தரமான வீடு கிடைக்கும் வரை மோடி ஓயமாட்டார் அல்லது ஓய்வெடுக்கமாட்டார். பின்தங்கியவர்களுக்கு முன்னுரிமை மற்றும் ஏழைகளுக்கு சேவை செய்வதுதான் மோடியின் இலக்கு.
நண்பர்களே,
சர் எம். விஸ்வேஸ்வரய்யா அவர்களின் பிறந்த தினத்தில் நாம் பொறியாளர் தினத்தை கொண்டாடுகிறோம். வளர்ச்சியடைந்த இந்தியா மற்றும் வளர்ச்சியடைந்த பீகாரை கட்டமைப்பதில் பொறியாளர்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றனர். இந்த சந்தர்ப்பத்தில் நாட்டின் அனைத்து பொறியாளர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளையும் நல்வாழ்த்துகளையும் தெரிவிக்கிறேன். பொறியாளர்களின் கடின உழைப்பும் திறமையும் இன்றைய நிகழ்ச்சியில் கூட தெரிகிறது. பூர்னியா விமான நிலையத்தின் டெர்மினல் கட்டடம் ஐந்து மாதங்களுக்கும் குறைவான சாதனை நேரத்தில் கட்டப்பட்டுள்ளது. இன்று, இந்த டெர்மினல் திறந்து வைக்கப்பட்டு, முதல் வணிக விமானமும் கொடியசைத்து அனுப்பப்பட்டுள்ளது. எங்கள் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர், திரு நாயுடு அவர்களும் இங்கே இருக்கிறார்; அவருக்கு ஒரு பெரிய கைதட்டல் கொடுப்போம், ஏனெனில் இங்கிருந்து விமானங்கள் புறப்படுவதை உறுதி செய்பவர் அவர் தான். இந்த புதிய விமான நிலையத்துடன், பூர்னியா இப்போது நாட்டின் விமான வரைபடத்தில் இடம் பெற்றுள்ளது. இனிமேல், பூர்னியா மற்றும் சீமாஞ்சல் பகுதி நாடு முழுவதும் உள்ள முக்கிய நகரங்கள், வர்த்தக மையங்களுடன் நேரடி இணைப்பைப் பெறும்.
நண்பர்களே,
தேசிய ஜனநாயக கூட்டணி (என்.டி.ஏ) அரசு இந்த முழு பகுதியையும் நவீன உயர் தொழில்நுட்ப ரயில் சேவைகளுடன் இணைத்து வருகிறது. இன்றும், வந்தே பாரத், அம்ரித் பாரத் மற்றும் பயணிகள் ரயில்களுக்கு கொடியசைத்து அனுப்பினேன். புதிய அரரியா-கல்காலியா ரயில் பாதை திறந்து வைக்கப்பட்டு, புதிய விக்ரமசீலா-கட்டாரியா ரயில் பாதைக்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.
நண்பர்களே,
சில நாட்களுக்கு முன்பு, பாரத அரசு மற்றொரு முக்கிய முடிவை எடுத்தது. பக்சர்-பாகல்பூர் அதிவேக வழித்தடத்தின் மோகாமா-மங்கேர் பிரிவு அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இது மங்கேர், ஜமால்பூர், பாகல்பூர் போன்ற தொழில்துறை மையங்களுக்கு பெரிதும் பயனளிக்கும். பாகல்பூர்-டும்கா-ராம்பூர்ஹாத் ரயில் பாதையை இரட்டிப்பாக்குவதற்கும் அரசு அங்கீகாரம் அளித்துள்ளது.
நண்பர்களே,
நாட்டின் வளர்ச்சிக்கு பீகாரின் வளர்ச்சி அவசியம். மேலும் பீகாரின் வளர்ச்சிக்கு, பூர்னியா மற்றும் சீமாஞ்சலின் வளர்ச்சி அவசியம். ஆர் ஜே டி மற்றும் காங்கிரஸ் அரசின் தவறான ஆட்சியால் மிகவும் பாதிக்கப்பட்டது இந்த பகுதி தான். ஆனால் இப்போது, என்.டி.ஏ அரசின் நிலைமையை மாற்றி வருகிறது. இந்த பகுதி இப்போது வளர்ச்சியின் மையமாக உள்ளது.
நண்பர்களே,
மின்சாரத் துறையில் பீகாரை தன்னிறைவு அடையச் செய்யும் பணியும் நடந்து வருகிறது. பாகல்பூரின் பீர்பைந்தியில் 2,400 மெகாவாட் அனல்மின் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
நண்பர்களே,
பீகாரின் இரட்டை எஞ்சின் அரசு விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்போரின் வருமானத்தை அதிகரிக்க உறுதிபூண்டுள்ளது. இன்று, கோசி-மேச்சி ஆறு இணைப்பு திட்டத்தின் முதல் கட்டத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. இது கிழக்கு கோசி பிரதான கால்வாயை விரிவாக்கி, லட்சக்கணக்கான ஹெக்டேர் நிலத்திற்கு பாசனம் வழங்கும், மேலும் வெள்ளத்தால் ஏற்படும் சவால்களை எதிர்கொள்ள உதவும்.
நண்பர்களே,
மக்கானா பயிரிடுவது பீகார் விவசாயிகளுக்கு வருமானத்தின் முக்கிய ஆதாரமாகவும் உள்ளது. ஆனால் முந்தைய அரசின் மக்கானா மற்றும் அதை பயிரிடும் விவசாயிகளை புறக்கணித்தன. எனது அரசு வருவதற்கு முன்பு இப்போது இங்கு இருப்பவர்கள் மக்கானா என்ற வார்த்தையையே கேட்டிருக்கவில்லை என்று நான் நம்பிக்கையுடன் கூற முடியும். மக்கானாவிற்கு தகுதியான முன்னுரிமை அளித்தது எங்கள் அரசு தான் .
நண்பர்களே,
தேசிய மக்கானா வாரியம் அமைக்கப்படும் என்று நான் பீகார் மக்களுக்கு வாக்குறுதி அளித்திருந்தேன். நேற்றுதான், தேசிய மக்கானா வாரியம் அமைப்பதற்கான அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டது. தேசிய மக்கானா வாரியம் மக்கானா விவசாயிகளுக்கு நியாயமான விலை கிடைப்பதை உறுதி செய்யவும், இந்தத் துறையில் நவீன தொழில்நுட்பம் கடைப்பிடிக்கப்படுவதற்கும் தொடர்ந்து பணியாற்றும். மக்கானா துறையின் வளர்ச்சிக்காக சுமார் 450 கோடி ரூபாய் வளர்ச்சித் திட்டத்திற்கு எங்கள் அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
நண்பர்களே,
பீகாரின் இந்த வளர்ச்சியின் வேகம், பீகாரின் இந்த முன்னேற்றம், சிலருக்கு பிடிக்கவில்லை. பல தசாப்தங்களாக பீகாரை சுரண்டியவர்கள், இந்த மண்ணுக்கு துரோகம் செய்தவர்கள், பீகாரும் புதிய மைல்கற்களை எட்ட முடியும் என்பதை ஏற்க தயாராக இல்லை. பீகாரின் ஒவ்வொரு துறையிலும் ஆயிரக்கணக்கான கோடி மதிப்புள்ள வளர்ச்சித் திட்டங்கள் நடந்து வருவதை நீங்கள் காணலாம். ராஜ்கிரில் ஆசியா கோப்பை ஹாக்கி போன்ற பெரிய நிகழ்வுகள் நடத்தப்பட்டன, அவுண்டா-சிமாரியா பாலம் போன்ற வரலாற்று கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட்டன. பீகாரில் தயாரிக்கப்பட்ட இன்ஜின்கள் ஆப்பிரிக்கா வரை ஏற்றுமதி செய்யப்படுகின்றன. ஆனால் காங்கிரஸ் ஆர்ஜேடி-யால் இந்த முன்னேற்றத்தை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. பீகார் முன்னேறும் ஒவ்வொரு முறையும், இவர்கள் பீகாரை அவமதிக்க ஆரம்பிக்கின்றனர். ஆர்ஜேடி-யின் கூட்டணி கட்சியான காங்கிரஸ் சமீபத்தில் சமூக ஊடகத்தில் பீகாரை ஒரு 'பீடி'யுடன் ஒப்பிட்டதை நீங்கள் பார்த்திருக்க முடியும். இது போன்றது தான் பீகார் மீதான அவர்களின் வெறுப்பு! ஊழல் மற்றும் முறைகேடுகள் மூலம் பீகாரின் நற்பெயரை அவர்கள் அழித்தனர். இப்போது, பீகாரின் முன்னேற்றத்தைக் கண்டு, காங்கிரஸும் ஆர்ஜேடி-யும் மீண்டும் மாநிலத்தை இழிவுபடுத்த உறுதிபூண்டுள்ளனர்.
சகோதர சகோதரிகளே,
இத்தகைய மனநிலை கொண்டவர்கள் பீகாருக்கு ஒருபோதும் நன்மை செய்ய மாட்டார்கள். தங்கள் சொந்த பெட்டகங்களை நிரப்புவதில் மட்டுமே அக்கறை கொண்டவர்கள், ஏழைகளின் வீடுகளைப் பற்றி எப்படி கவலைப்படுவார்கள்? ஒரு காங்கிரஸ் பிரதமர் கூட ஒரு முறை காங்கிரஸ் அரசு 100 பைசா அனுப்பும்போது, 85 பைசா நடுவில் கொள்ளையடிக்கப்பட்டது என்று ஒப்புக்கொண்டிருந்தார். கொரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு, ஒவ்வொரு ஏழைக் குடும்பமும் இலவச உணவு தானியங்களைப் பெற்று வருகிறது. காங்கிரஸ்-ஆர்.ஜே.டி. அரசு எப்போதாவது உங்களுக்கு இலவச உணவு தானியம் வழங்கியிருக்குமா? இன்று, பிரதமரின் மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் காரணமாக ஒவ்வொரு ஏழைக் குடும்பத்திற்கும் 5 லட்சம் ரூபாய் வரை இலவச மருத்துவ சிகிச்சை வசதி உள்ளது. உங்களுக்காக மருத்துவமனைகள் கூட கட்ட முடியாதபோது அவர்கள் எப்போதாவது உங்களுக்கு இலவச மருத்துவ சிகிச்சை அளித்திருக்க முடியுமா? அவர்களால் இலவச மருத்துவ சிகிச்சை வழங்க முடிந்ததா என்று நான் உங்களிடம் கேட்க விரும்புகிறேன்? அவர்கள் எப்போதாவது உங்களுக்காக அக்கறை கொண்டிருக்க முடியுமா?
நண்பர்களே,
காங்கிரஸும் ஆர்.ஜே.டி.யும் பீகாரின் கௌரவத்திற்கு மட்டுமல்ல, பீகாரின் அடையாளத்திற்கே அச்சுறுத்தல். ஊடுருவல் காரணமாக இன்று சீமாஞ்சல் மற்றும் கிழக்கிந்தியா முழுவதும் ஒரு பெரிய மக்கள்தொகை நெருக்கடி ஏற்பட்டுள்ளது. பீகார், வங்காளம், அசாம் மற்றும் பல மாநிலங்களில் உள்ள மக்கள் தங்கள் சகோதரிகள் மற்றும் மகள்களின் பாதுகாப்பைப் பற்றி மிகவும் கவலைப்படுகிறார்கள். அதனால் தான் நான் செங்கோட்டையிலிருந்து மக்கள்தொகை சமூககணக்கெடுப்பு பணியை அறிவித்தேன். ஆனால் அவர்களின் வாக்கு வங்கி அரசியலின் சுயநலத்தை பாருங்கள். காங்கிரஸ், ஆர்.ஜே.டி. மற்றும் அவர்களின் முழு அமைப்பும் ஊடுருவும் நபர்களுக்காக வாதிடுவதில், அவர்களைப் பாதுகாப்பதில், வெட்கமின்றி கோஷங்களை எழுப்புவதில், வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமாக வந்தவர்களை பாதுகாக்க அணிவகுப்புகளை ஏற்பாடு செய்வதில் மும்முரமாக உள்ளனர். இவர்கள் மக்கள் பீகார் மற்றும் நாட்டின் வளங்கள், பாதுகாப்பு ஆகிய இரண்டையும் பணயம் வைக்க நினைக்கிறார்கள். ஆனால் இன்று, பூர்னியாவின் மண்ணிலிருந்து நான் அவர்களுக்கு ஒரு விஷயத்தை மிகத் தெளிவாகக் கூற விரும்புகிறேன். ஆர்ஜேடி மற்றும் காங்கிரஸ் கவனமாகக் கேளுங்கள்: ஒவ்வொரு ஊடுருவும் நபரும் வெளியேற வேண்டும். ஊடுருவலுக்கு பூட்டு போடுவது என்டிஏ-வின் உறுதியான பொறுப்பு. ஊடுருவும் நபர்களை பாதுகாத்து நிற்கும் அந்த தலைவர்களுக்கு, ஊடுருவும் நபர்களுக்கு கேடயமாக முன்வந்துள்ளவர்களுக்கு நான் சவால் விடுகிறேன். ஊடுருவும் நபர்களைப் பாதுகாக்க நீங்கள் எவ்வளவு முயற்சி செய்தாலும், அவர்களை அகற்றுவதற்கான எங்கள் தீர்மானத்தில் நாங்கள் தொடர்ந்து செயல்படுவோம். ஊடுருவும் நபர்களுக்கு கேடயமாக மாற முயற்சிப்பவர்கள், கவனமாகக் கேளுங்கள். பாரதத்தில் பாரதத்தின் சட்டமே நடைமுறைப்படுத்தப்படும், ஊடுருவும் நபர்களின் விருப்பங்கள் அல்ல. இது மோடியின் உத்தரவாதம். ஊடுருவும் நபர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும், நாடு அதன் நேர்மறையான விளைவுகளைக் காணும். ஊடுருவும் நபர்களுக்கு ஆதரவாக காங்கிரஸும் ஆர்ஜேடி-யும் செய்யும் சத்தத்திற்கு, பீகார் மற்றும் நாட்டின் மக்கள் பொருத்தமான பதிலைக் கொடுக்கப் போகிறார்கள்.
நண்பர்களே,
காங்கிரஸும் ஆர்ஜேடி-யும் கடந்த இரண்டு தசாப்தங்களாக பீகாரில் அதிகாரத்திலிருந்து வெளியேறி உள்ளனர். சந்தேகமின்றி, இதில் மிகப்பெரிய பங்கு பீகாரின் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளுக்கு உரியது. இன்று, நான் குறிப்பாக பீகாரின் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளுக்கு வணக்கம் செலுத்துகிறேன். ஆர்.ஜே.டி. காலத்தில் வெளிப்படையான கொலைகள், பாலியல் வன்கொடுமைகைள் மற்றும் கடத்தல்களால் மிக மோசமாக பாதிக்கப்பட்டவர்கள் என் பீகார் தாய்மார்கள் மற்றும் சகோதரிகள், இந்த மண்ணின் பெண்கள். ஆனால் ரட்டை எஞ்சின் அரசின் கீழ், அதே பெண்கள் 'லட்சாதிசபதி சகோதரி' மற்றும் 'ட்ரோன் சகோதரி' ஆகி வருகிறார்கள். நாங்கள் இன்று 'ட்ரோன் சகோதரிகளை' உருவாக்கி வருகிறோம். பெண்கள் சுய உதவி குழுக்கள் மூலம் ஒரு பெரிய புரட்சியை வழிநடத்தி வருகிறார்கள். குறிப்பாக திரு நிதீஷ் அவர்களின் தலைமையில், 'ஜீவிகா சகோதரி' இயக்கத்தின் வெற்றி முன்னெப்போதும் இல்லாததாக உள்ளது. பீகார் முழு நாட்டிற்கும் உத்வேகமாக மாறியுள்ளது.
நண்பர்களே,
இன்றும் கூட, எங்கள் சகோதரிகளுக்கு சுமார் 500 கோடி ரூபாய் மதிப்புள்ள சமுதாய முதலீட்டு நிதி விடுவிக்கப்பட்டுள்ளது. 500 கோடி ரூபாய்! இந்த தொகை கிளஸ்டர் அளவிலான கூட்டமைப்புகளை சென்றடையும். இது கிராமங்கள் முழுவதும் சுய உதவி குழுக்களுக்கு அதிகாரம் அளிக்கும். இது பெண்களுக்கு தங்கள் திறனை விரிவுபடுத்தும் வாய்ப்பை வழங்கும்.
நண்பர்களே,
ஆர்ஜேடி மற்றும் காங்கிரஸின் ஒரே கவலை எப்போதும் அவர்களின் சொந்த குடும்பம் மட்டுமே. அவர்கள் உங்கள் குடும்பங்களை ஒருபோதும் கவனிக்க மாட்டார்கள். ஆனால் மோடிக்கு, நீங்கள் அனைவரும் மோடியின் குடும்பம். அதனால் தான் மோடி கூறுகிறார்: 'சப்கா சாத், சப்கா விகாஸ்' அனைவருடனும் சேர்ந்து, அனைவருக்குமான வளர்ச்சி).
எனவே, சகோதர சகோதரிகளே,
மோடி உங்கள் செலவுகளைப் பற்றி அக்கறை கொள்கிறார், மோடி உங்கள் சேமிப்பைப் பற்றி அக்கறை கொள்கிறார். வரவிருக்கும் நாட்களில் பல பண்டிகைகள் உள்ளன. இந்த முறை, தீபாவளி மற்றும் சத்திற்கு முன் ஏழைகள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினருக்கு எங்கள் அரசு மிகப் பெரிய பரிசு அளித்துள்ளது. இன்று செப்டம்பர் 15 சரியாக ஒரு வாரம் கழித்து, செப்டம்பர் 22, நவராத்திரியின் முதல் நாள், நாடு முழுவதும் ஜிஎஸ்டி வெகுவாகக் குறைக்கப்படும். உங்கள் தினசரி தேவைகளின் பெரும்பாலான பொருட்களின் ஜி.எஸ்.டி. கணிசமாகக் குறைக்கப்பட்டுள்ளது. குறைக்கப்பட்ட ஜி.எஸ்.டி. காரணமாக சமையலறை நடத்துவதற்கான செலவு மிகவும் குறையும் என்று இங்கு இருக்கும் என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளுக்கு குறிப்பாகக் கூற விரும்புகிறேன். பல் துலக்கும் பற்பசை, சோப்பு, ஷாம்பூ முதல் நெய் மற்றும் பல உணவுப் பொருட்கள் வரை அனைத்தும் மலிவாகும். குழந்தைகளின் படிப்பிற்குத் தேவையான எழுதுபொருட்களின் விலைகளும் குறையும். இந்த பண்டிகை காலத்தில் குழந்தைகளுக்கு புதிய ஆடைகள் மற்றும் காலணிகள் வாங்குவதும் எளிதாகும், ஏனெனில் இவையும் மலிவாகப் போகின்றன. ஏழைகளைப் பற்றி கவலைப்படும் அரசு இருக்கும்போது, அது ஏழைகளின் நலனுக்காக இவ்வாறு தான் செயல்படும்.
நண்பர்களே,
சுதந்திரப் போராட்டத்தில் பூர்னியாவின் மகன்கள் பிரிட்டிஷாருக்கு பாரதத்தின் வலிமையைக் காட்டியிருந்தனர். இன்று, மீண்டும் ஒருமுறை, ஆபரேஷன் சிந்தூர் மூலம் நாட்டின் அதே வலிமையை நாம் எதிரிக்குக் காட்டியுள்ளோம். இந்த உத்தியில் பூர்னியாவின் துணிச்சலான மகனும் பெரிய பங்கு வகித்தார். நாட்டின் பாதுகாப்பாக இருந்தாலும் சரி, நாட்டின் வளர்ச்சியாக இருந்தாலும் சரி, பாரதத்தின் முன்னேற்றத்தில் பீகார் எப்போதும் பெரும் பங்களிப்பைச் செய்துள்ளது. பீகாரின் வளர்ச்சியின் இந்த பிரச்சாரத்தை அதே வழியில் தொடர்ந்து துரிதப்படுத்த வேண்டும். மீண்டும் ஒருமுறை, அனைத்து வளர்ச்சித் திட்டங்களுக்காகவும் பீகாரின் என் சகோதர சகோதரிகளுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவிக்கிறேன். திரு நிதீஷின் தலைமையை நான் பாராட்டுகிறேன். உங்கள் அனைவருக்கும் மிக்க நன்றி. இப்போது, முழு வலிமையுடன் என்னுடன் சேர்ந்து சொல்லுங்கள்:
பாரத அன்னை வாழ்க! பாரத அன்னை வாழ்க! பாரத அன்னை வாழ்க!
மிக்க நன்றி.
(Release ID: 2188632)
Visitor Counter : 6
Read this release in:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam