தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஐஎஃப்எஃப்ஐ 2025, புதுமை மற்றும் உள்ளடக்கத்தை உள்ளடக்கி, பெண் திரைப்படக் கலைஞர்கள், புதிய திறமைகள் மற்றும் திரைப்படங்களில் படைப்பாற்றல் சிறப்பைக் கொண்டாடும்: மத்திய இணையமைச்சர் டாக்டர் எல். முருகன்

Posted On: 07 NOV 2025 5:10PM by PIB Chennai

56-வது இந்திய சர்வதேச திரைப்பட விழா (ஐஎஃப்எஃப்ஐ) நவம்பர் 20 முதல் 28 வரை கோவாவில் நடைபெற உள்ளது. இதற்கான முன்னோட்ட நிகழ்ச்சி இன்று புதுதில்லியில் நடைபெற்றது.  81 நாடுகளைச் சேர்ந்த 240க்கும் மேற்பட்ட படங்கள், 13 உலக பிரீமியர்கள், 4 சர்வதேச பிரீமியர்கள் மற்றும் 46 ஆசிய பிரீமியர்கள் முதலியவை விழாவில் இடம்பெறும். இந்த விழாவிற்கு, சாதனை அளவாக, 127 நாடுகளிலிருந்து 2,314 சமர்ப்பிப்புகள் வந்துள்ளன. இது உலகளாவிய விழாக்களிடையே ஐஎஃப்எஃப்ஐ-இன் வளர்ந்து வரும் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

இன்றைய நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய மத்திய தகவல் ஒலிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர் டாக்டர் எல். முருகன், இந்த ஆண்டு ஐஎஃப்எஃப்ஐ புதுமை மற்றும் உள்ளடக்கத்தை பிரதிபலிக்கும் பல புதிய முயற்சிகளை அறிமுகப்படுத்தும்  என்று குறிப்பிட்டார். இந்த ஆண்டு 50க்கும் மேற்பட்ட பெண் இயக்குநர்கள் தங்கள் படைப்புகளை வெளியிட்டதாக அமைச்சர் எடுத்துரைத்தார். இது திரைப்படத் துறையில் மகளிர் சக்தியை ஊக்குவிக்கும் அரசின் உறுதிப்பாட்டை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது, என்றார் அவர்.

வலை மற்றும் ஸ்ட்ரீமிங் உள்ளடக்கத்தில் சிறந்த படைப்புகளை அங்கீகரிக்க இந்த ஆண்டு ஓடிடி விருதுகள் தொடரும் என்றும் அவர் அறிவித்தார். திரைக்கதை எழுதுதல், தயாரிப்பு வடிவமைப்பு மற்றும் ஒலி போன்ற துறைகளில் புதிய மற்றும் வளர்ந்து வரும் திறமைகளுக்கு  இந்த விழா தொடர்ந்து ஆதரவளிப்பதாக அவர் கூறினார். டிஜிட்டல் திருட்டுக்கு எதிரான சட்டங்களை வலுப்படுத்தவும், திரைப்பட சான்றிதழை எளிமைப்படுத்தவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் கூறினார்பல மொழி படங்களுக்கான மத்திய திரைப்பட தணிக்கை வாரியத்தின் வரவிருக்கும் ஒரே பாரதம், உன்னத பாரதம் சான்றிதழ் இந்தியாவின் கலாச்சார ஒற்றுமையை மேலும் ஊக்குவிக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

அமைச்சகத்தின் செயலாளர் திரு சஞ்சய் ஜாஜு, இந்திய திரைப்படங்கள் உலக அளவில் வலுவான தாக்கத்தை ஏற்படுத்தி வருவதாகவும், ஆஸ்திரேலிய பாக்ஸ் ஆபிஸில் இந்திய திரைப்படங்கள் ஹாலிவுட் வெளியீடுகளை விட சிறப்பாக செயல்படுவதாகவும் எடுத்துரைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் பத்திரிகை தகவல் அலுவலகத்தின் முதன்மை தலைமை இயக்குநர் திரு திரேந்திர ஓஜா, தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் திரு பிரபாத், இணைச் செயலாளர் (திரைப்படங்கள்) டாக்டர் அஜய் நாகபூஷன்; இந்திய பனோரமா ஜூரி (திரைப்படப் பிரிவு) தலைவர் திரு ராஜா பண்டேலா; தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழக மேலாண் இயக்குநர் திரு பிரகாஷ் மக்தம் மற்றும் இந்திய பனோரமா ஜூரி (கதை அம்சம் அல்லாத படங்கள் பிரிவு) தலைவர் திரு தரம் குலாட்டி ஆகியோரும் கலந்து கொண்டனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:             https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2187436  

***

AD/RB/RJ


(Release ID: 2187729) Visitor Counter : 4