பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

கோலாலம்பூரில் நடைபெற்ற 22-வது ஆசியான்-இந்தியா உச்சிமாநாட்டில் காணொலிக் காட்சி வாயிலாகப் பிரதமர் பங்கேற்றார்

प्रविष्टि तिथि: 26 OCT 2025 9:31PM by PIB Chennai

22-வது ஆசியான்-இந்தியா உச்சிமாநாடு அக்டோபர் 26, 2025 அன்று நடைபெற்றது. பிரதமர் திரு நரேந்திர மோடி இந்த உச்சிமாநாட்டில் காணொலிக் காட்சி வாயிலாகப் பங்கேற்றார். பிரதமரும் ஆசியான் தலைவர்களும் இணைந்து ஆசியான்-இந்தியா உறவுகளில் முன்னேற்றத்தை மதிப்பாய்வு செய்து விரிவான உத்திசார் கூட்டாண்மையை வலுப்படுத்துவதற்கான முன்முயற்சிகளைப் பற்றி விவாதித்தனர். இது இந்தியா-ஆசியான் உச்சிமாநாட்டில் பிரதமரின் 12-வது பங்கேற்பு ஆகும்.

தனது உரையின்போது, ஆசியானின் 11-வது உறுப்பினராக கிழக்கு திமோர் இணைந்ததற்கு பிரதமர் வாழ்த்து தெரிவித்ததுடன், ஆசியானின் முழுமையான  உறுப்பினராக அதன் முதல் ஆசியான்-இந்தியா உச்சிமாநாட்டிற்கு குழுவை வரவேற்றார். மேலும் அதன் மனித மேம்பாட்டிற்கு இந்தியாவின் தொடர்ச்சியான ஆதரவைத் தெரிவித்தார்.

ஆசியான் ஒற்றுமை, ஆசியான் மையத்தன்மை மற்றும் இந்தோ-பசிபிக் மீதான ஆசியான் கண்ணோட்டத்திற்கான இந்தியாவின் ஆதரவை மீண்டும் வலியுறுத்திய பிரதமர், ஆசியான் சமூக தொலைநோக்குப் பார்வை 2045 ஐ ஏற்றுக்கொண்டதற்காக ஆசியானைப் பாராட்டினார்.

ஆசியான்-இந்தியா தடையில்லா வர்த்தக ஒப்பந்தத்தை  முன்கூட்டியே மதிப்பாய்வு செய்வது, நமது மக்களின் நலனுக்காக நமது உறவின் முழு பொருளாதார ஆற்றலையும் வெளிப்படுத்தும் என்றும், பிராந்திய ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் என்றும் பிரதமர் தெரிவித்தார்.

பயங்கரவாதம் உலக அமைதி மற்றும் பாதுகாப்பிற்கு ஒரு கடுமையான சவாலாக உள்ளது என்று குறிப்பிட்டு, பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் ஒற்றுமையின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.

"உள்ளடக்கம் மற்றும் நிலைத்தன்மை" என்ற கருப்பொருளுடன் மலேசியத் தலைமைக்கு ஆதரவாக, பிரதமர் அறிவித்ததாவது:

* ஆசியான்-இந்தியா விரிவான உத்திசார் கூட்டாண்மையை (2026-2030) செயல்படுத்த ஆசியான்-இந்தியா செயல் திட்டத்தை செயல்படுத்துவதற்கான ஆதரவு

* ஆசியான்-இந்தியா சுற்றுலா ஆண்டைக் கொண்டாடும் வேளையில், சுற்றுலாத்துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்த ஆசியான்-இந்தியா கூட்டுத் தலைவர்களின் நிலையான சுற்றுலா குறித்த அறிக்கையை ஏற்றுக்கொள்வது

* கடல்சார் பொருளாதாரத்தில் கூட்டாண்மைகளை உருவாக்க 2026 ஆம் ஆண்டை "ஆசியான்-இந்தியா கடல்சார் ஒத்துழைப்பு ஆண்டு" என்று பெயரிடுதல்

* பாதுகாப்பான கடல்சார் சூழலுக்கான இரண்டாவது ஆசியான்-இந்தியா பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டத்தையும், இரண்டாவது ஆசியான்-இந்தியா கடல்சார் பயிற்சியையும் ஏற்பாடு செய்ய முன்மொழிதல்

* அண்டை நாடுகளில் நெருக்கடி காலங்களின்போது முதலில் உதவும் நாடாக இந்தியா தனது பங்கைத் தொடரும். மேலும், பேரிடர் தயார்நிலை மற்றும் மனிதாபிமான உதவி மற்றும் பேரிடர் நிவாரணத்தில் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துதல்

* ஆசியான் மின் கட்ட முயற்சியை ஆதரிப்பதற்காக புதுப்பிக்கத்தக்க எரிசக்தியில் 400 நிபுணர்களுக்கு பயிற்சி அளித்தல்

* கிழக்கு திமோருக்கு விரைவான தாக்கத் திட்டங்களை  விரிவுபடுத்துதல்

* பிராந்திய நிபுணத்துவத்தை வளர்ப்பதற்காக, நாளந்தா பல்கலைக்கழகத்தில் தென்கிழக்கு ஆசிய ஆய்வுகளுக்கான மையத்தை நிறுவுவதற்கான முன்மொழிவு

* கல்வி, எரிசக்தி, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், நிதி தொழில்நுட்பம் மற்றும் கலாச்சார பாதுகாப்பு ஆகியவற்றில் தொடர்ச்சியான ஒத்துழைப்பை ஆதரித்தல். உள்கட்டமைப்பு, குறைக்கடத்தி, வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள், அரிய மற்றும் முக்கியமான கனிமங்கள் ஆகியவற்றில் அதிகரித்து வரும் ஒத்துழைப்பின் அவசியத்தை வலியுறுத்துதல்

* குஜராத்தின் லோதலில் கிழக்கு ஆசிய உச்சிமாநாடு கடல்சார் பாரம்பரிய விழா மற்றும் கடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்த மாநாட்டை நடத்துதல்

ஆசியானுக்கு இந்தியாவின் நீண்டகால ஆதரவையும், அதன் கிழக்கு நோக்கிய செயல்பாட்டுக் கொள்கை மூலம் பிராந்தியத்துடன் ஈடுபாட்டை ஆழப்படுத்துவதற்கான நாட்டின் தொடர்ச்சியான உறுதிப்பாட்டையும் ஆசியான் தலைவர்கள் பாராட்டினர்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=2182724

 

***

(Release ID: 2182724)

SS/BR/KPG/KR


(रिलीज़ आईडी: 2187258) आगंतुक पटल : 24
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Bengali , Manipuri , Assamese , Punjabi , Gujarati , Odia , Kannada , Malayalam