பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

இந்தியாவின் அதிக எடை கொண்ட தகவல் தொடர்பு செயற்கைக்கோளான சிஎம்எஸ்-03 வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டதற்காக இஸ்ரோவுக்கு பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்

Posted On: 02 NOV 2025 7:24PM by PIB Chennai

இந்தியாவின் அதிக எடை கொண்ட தகவல் தொடர்பு செயற்கைக்கோளான சிஎம்எஸ்-03 வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டதற்காக இந்தியா விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்திற்கு (இஸ்ரோ) பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் தள பதிவில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது:

நமது விண்வெளித் துறை தொடர்ந்து நமக்கு பெருமை அளிக்கிறது!

இந்தியாவின் அதிக எடை கொண்ட தகவல் தொடர்பு செயற்கைக்கோளான சிஎம்எஸ்-03 வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டதற்காக இஸ்ரோவிற்கு வாழ்த்துகள்.

நம் விஞ்ஞானிகளால் இயக்கப்படும் நமது விண்வெளித் துறை, சிறந்து விளங்குவதற்கும், புதுமைக்கும் அடையாளமாக மாறியிருப்பதுபாராட்டத்தக்கது. அவர்களது வெற்றிகள், தேசிய முன்னேற்றத்தை மேம்படுத்தி, எண்ணற்ற மக்களுக்கு அதிகாரம் அளித்துள்ளன.

@isro”

***

(Release ID: 2185583)

AD/VK/RJ


(Release ID: 2185624) Visitor Counter : 14