உள்துறை அமைச்சகம்
                
                
                
                
                
                    
                    
                        சுதந்திரப் போராட்ட இயக்கத்தின் முதுகெலும்பாகவும், நாட்டின் சிறந்த சிந்தனையாளராகவும் திகழ்ந்தவர் சர்தார் வல்லபாய் படேல் – மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா
                    
                    
                        
                    
                
                
                    Posted On:
                30 OCT 2025 3:05PM by PIB Chennai
                
                
                
                
                
                
                நாடு சுதந்திரமடைந்த பிறகு பல்வேறு பகுதிகளை ஒன்றிணைப்பதில் சர்தார் படேலின் பங்களிப்பு மகத்துவமானது என்று உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா தெரிவித்துள்ளார்.
சர்தார் வல்லபாய் படேலின் 150-வது பிறந்த தினத்தை குறிக்கும் வகையில் நடைபெற்று வரும் தேசிய ஒற்றுமை தின நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக பீகார் மாநிலம் பாட்னாவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இதனைத் தெரிவித்தார்.
கடந்த 2014-ம் ஆண்டு முதல் பிரதமர் திரு நரேந்திர மோடி, குஜராத் மாநிலம் கெவாடியாவிற்கு ஆண்டு தோறும் அக்டோபர் 31-ம் தேதி வருகை புரிந்து சர்தார் படேலின் உருவ சிலைக்கு முன்பு நடைபெறும் மாபெரும் அணிவகுப்பில் பங்கேற்று வருவதாக கூறினார். சர்தார் படேலின் 150-வது பிறந்த தினத்தையொட்டி சிறப்பு நிகழ்வாக மாபெரும் அணிவகுப்பு நிகழ்ச்சியை உள்துறை அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ளதாக அவர் தெரிவித்தார். நாட்டின் ஒற்றுமை மற்றும் உறுதிப்பாட்டை வலியுறுத்தும் வகையிலும் மத்திய ஆயுத காவல்படை மற்றும் காவல்துறையினருக்கு மரியாதை செலுத்தும் வகையிலும் இந்த அணிவகுப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார். இந்தியாவில் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டின் அடையாளமாக நடைபெறும் இந்த அணிவகுப்பு சர்தார் வல்லபாய் படேலின் மாபெரும் சிலைக்கு முன்பாக நடைபெறும் என்று அவர் கூறினார்.
இதைத் தொடர்ந்து ஒற்றுமை ஓட்டத்தையும் பெரிய அளவில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். இந்த ஓட்டம் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள், மாவட்ட காவல்நிலையங்கள், பள்ளிகள், கல்லூரிகளில் நடத்தப்படும் என்று அவர் கூறினார். இந்த ஒற்றுமை ஓட்டத்திற்கு பிறகு அனைத்து குடிமக்களும் ஒற்றுமைக்கான உறுதிமொழியை எடுத்துக்கொள்ள உள்ளதாக அவர் தெரிவித்தார்.
சுதந்திரப் போராட்ட இயக்கத்தின் முதுகெலும்பாகவும், நாட்டின் சிறந்த சிந்தனையாளராகவும் திகழ்ந்தவர் சர்தார் வல்லபாய் படேல் என்று மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா புகழாரம் சூட்டியுள்ளார். நாட்டின் சுதந்திரப் போராட்டத்தில் முக்கிய பங்காற்றிய அவர், நாட்டின் முன்னேற்றத்திற்காக தனது வாழ்க்கையை முழுமையாக அர்ப்பணித்து கொண்டதாக அவர் கூறினார். நாட்டின் சுதந்திரத்திற்கு பிறகு 562 சமஸ்தானங்களாக இருந்த பகுதிகளை ஒரே நாடாக ஒன்றிணைத்தவர் என்றும் அவர் கூறினார். 
நாட்டிற்காக சிறந்த சேவையாற்றிய சர்தார் படேலுக்கு 41 ஆண்டுகளுக்குப் பிறகு நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். பிரதமர் திரு நரேந்திர மோடி குஜராத் மாநில முதலமைச்சராக இருந்த போது ஒற்றுமையின் சின்னமாக சர்தார் படேலின் உருவசிலையை கட்டமைத்ததாகவும் இது அவருக்கு செலுத்தும் மரியாதை என்று அவர் கூறினார். 182 மீட்டர் உயரம் கொண்ட இந்த சிலையை நிறுவும் பணிகள் 57 மாதங்களில் நிறைவடைந்ததாக அவர் தெரிவித்தார். இந்த சிலை அமைப்பதற்கு 25,000 டன் எஃகு, 90,000 கியூபிக் மீட்டர் அளவிலான கான்கிரீட் கலவைகள் மற்றும் 1700 டன் வெண்கல உலோகம் பயன்படுத்தப்பட்டுள்ளது. 
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2184144  
***
SS/SV/AG/SH
                
                
                
                
                
                (Release ID: 2184327)
                Visitor Counter : 6
                
                
                
                    
                
                
                    
                
                Read this release in: 
                
                        
                        
                            Malayalam 
                    
                        ,
                    
                        
                        
                            English 
                    
                        ,
                    
                        
                        
                            Urdu 
                    
                        ,
                    
                        
                        
                            हिन्दी 
                    
                        ,
                    
                        
                        
                            Marathi 
                    
                        ,
                    
                        
                        
                            Bengali-TR 
                    
                        ,
                    
                        
                        
                            Bengali 
                    
                        ,
                    
                        
                        
                            Assamese 
                    
                        ,
                    
                        
                        
                            Gujarati 
                    
                        ,
                    
                        
                        
                            Odia 
                    
                        ,
                    
                        
                        
                            Telugu 
                    
                        ,
                    
                        
                        
                            Kannada