தேர்தல் ஆணையம்
azadi ka amrit mahotsav

வாக்காளர்கள் 1950 என்ற உதவி எண்ணை பயன்படுத்தி தேர்தல் தொடர்பான கேள்விகள் / குறைகளுக்கு தீர்வு காணலாம்: தேர்தல் ஆணையம்

Posted On: 29 OCT 2025 4:58PM by PIB Chennai

மக்களின் தேர்தல் தொடர்பான அனைத்துவிதமான கேள்விகள் / குறைகளுக்குத் தீர்வு காணும் நோக்கில் 36 மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களுக்கு தேசிய வாக்காளர் உதவி எண்ணை தேர்தல் ஆணையம் செயல்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளது.

அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய உதவி தொலைபேசி எண்களை தேசிய தகவல் தொடர்பு மையம் வழங்கும். இந்த உதவி தொலைபேசி எண் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்படும் என்றும், 1800-11-1950 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண் வாயிலாக தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் மற்றும் இதர தரப்பினருக்கு வாக்காளர் சேவைகள் மற்றும் தேர்தல் தொடர்பான மக்களின் சந்தேகங்களுக்கு தீர்வு காணும் வகையில் பயிற்சிப் பெற்ற பணியாளரைக் கொண்டு பதில் அளிக்கப்படுகிறது.

மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் மற்றும் மாவட்ட  நிர்வாகங்கள் சொந்தமாக மாநிலம் மற்றும் மாவட்ட தகவல் தொடர்பு மையங்களை அமைப்பதற்கான அறிவுறுத்தல்களை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.  இது குறித்த நேரத்தில் உள்ளூர் மக்களுக்கு ஏற்படும் சந்தேகங்களுக்கு பதில் அளிப்பதை உறுதி செய்கிறது. இந்த மையங்கள் ஆண்டு முழுவதும் அனைத்து வேலை நாட்களில் அலுவலகப் பணி நேரங்களில் செயல்படும் என்றும் அந்தந்த மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் மண்டல மொழிகளில் மக்களின் சந்தேகங்களுக்கு பதில் அளிக்கப்படும் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 

அனைத்துவித புகார்கள் மற்றும் கேள்விகள் தேசிய குறைதீர்ப்பு சேவை இணையதளத்தில் பதிவு செய்யப்பட்டுக் கண்காணிக்கப்படும்.

கூடுதலாக வாக்குச்சாவடி நிலை அலுவலருடன் தொலைபேசி வழியாக உரையாடுவதற்கு முன்பதிவு செய்வதற்கான வசதியையும் தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது. இதன் மூலம் மக்கள் நேரடியாக வாக்குச்சாவடி நிலைய அதிகாரிகளை தொடர்பு கொண்டு தங்களது சந்தேகங்களுக்குத் தீர்வு காணமுடியும். 

மக்கள் தேர்தல் அதிகாரிகளை தேர்தல் ஆணையத்தின் செயலி மூலம் தொடர்பு கொள்வதற்கான வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனை அனைத்து மாநில, மாவட்ட தேர்தல் அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து 48 மணி நேரததிற்குள் மக்களின் சந்தேகங்களுக்கு விரைவாக தீர்வு காண்பதை உறுதி செய்ய வேண்டும் என்று தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்  https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2183805

***

SS/SV/KPG/SH


(Release ID: 2183936) Visitor Counter : 18