பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

காலாட்படை தினத்தையொட்டி காலாட்படையின் துணிச்சல் மற்றும் அர்ப்பணிப்புக்கு பிரதமர் மரியாதை செலுத்தினார்

Posted On: 27 OCT 2025 8:39PM by PIB Chennai

காலாட்படை தினத்தையொட்டி காலாட்படையின் துணிச்சல் மிக்க வீரர்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி மரியாதை செலுத்தியுள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் தள பதிவில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது:

“காலாட்படை தினத்தன்று, நமது காலாட்படைகளின் உறுதியான துணிச்சலையும், அர்ப்பணிப்பையும் போற்றுகிறோம். நம் தேசத்தைப் பாதுகாப்பதில் வீரர்களின்  உறுதிப்பாடு, வலிமை மற்றும் தியாகத்தின் வழிகாட்டியாக விளங்குகிறது. ஒவ்வொரு இந்தியரையும் ஊக்குவிக்கும் வகையில், துணிச்சல் மற்றும் சேவையின் உயர்ந்த கொள்கைகளை ஒவ்வொரு வீரரும் வெளிப்படுத்துகிறார்.

@adgpi”

(Release ID: 2183119)

***

SS/BR/SH


(Release ID: 2183156) Visitor Counter : 5