உள்துறை அமைச்சகம்
சட்டீஸ்கர் கன்கர் மாவட்டத்தில் 21 மாவோயிஸ்ட்டுகள் சரணடைந்தனர்: மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா மகிழ்ச்சி
Posted On:
27 OCT 2025 12:28PM by PIB Chennai
சட்டீஸ்கர் மாநிலம் கன்கர் மாவட்டத்தில் 21 மாவோயிஸ்ட்டுகள் தங்களது ஆயுதங்களுடன் சரணடைந்ததற்காக மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு அமித் ஷா மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் அவர் பதிவிட்டிருப்பதாவது: “சட்டீஸ்கர் மாநிலம் கன்கர் மாவட்டத்தில் 21 மாவோயிஸ்ட்டுகள் தங்களது ஆயுதங்களுடன் சரணடைந்தது குறித்து பகிர்ந்து கொள்வது மகிழ்ச்சி. அவர்களில் 13 பேர் மூத்த மாவோயிஸ்ட்டுகள் ஆவர். மோடி அரசின் அழைப்பின் பேரில் வன்முறையை கைவிட்டு தேசிய நீரோட்டத்தில் இணைந்ததற்காக நான் அவர்களை பாராட்டுகிறேன். துப்பாக்கிகளை ஏந்தியுள்ள மற்றவர்களும் விரைவில் சரணடையுமாறு நான் வேண்டுகோள் விடுக்கிறேன். 2026 மார்ச் 31 தேதிக்குள் நக்சல் தீவிரவாதத்தை ஒழிக்க நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்.
***
(Release ID: 2182806)
SS/IR/AG/KR
(Release ID: 2182902)
Visitor Counter : 10
Read this release in:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Malayalam