பிரதமர் அலுவலகம்
சர்தார் படேலின் பாரம்பரியத்தை கௌரவிக்க அக்டோபர் 31 அன்று நடைபெறும் ஒற்றுமைக்கான ஓட்டத்தில் இணையுமாறு மக்களுக்கு பிரதமர் வலியுறுத்தல்
प्रविष्टि तिथि:
27 OCT 2025 9:15AM by PIB Chennai
சர்தார் வல்லபாய் படேலின் 150-வது பிறந்த தினத்தையொட்டி அக்டோபர் 31 அன்று நடைபெறவுள்ள ஒற்றுமைக்கான ஓட்டத்தில் பங்கேற்குமாறு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று நாட்டு மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். இந்நிகழ்வு தேசிய ஒற்றுமை தினத்தை குறிப்பதாகவும் இந்தியாவுக்காக சர்தார் படேல் கண்ட கனவான ஒற்றுமை மற்றும் ஒருங்கிணைப்பை கொண்டாடுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் ஒற்றுமை தின பாரதத்தின் பதிவிற்கு பதிலளித்து திரு மோடி எழுதியிருப்பதாவது:
“அக்டோபர் 31 அன்று நடைபெறும் ஒற்றுமைக்கான ஓட்டத்தில் ஒருங்கிணைப்பின் உத்வேகத்தை கொண்டாடுவோம்! சர்தார் படேலின் ஒருங்கிணைந்த இந்தியா என்ற தொலைநோக்குப் பார்வையை நாம் கௌரவிப்போம்.”
***
(Release ID: 2182748)
SS/IR/AG/KR
(रिलीज़ आईडी: 2182811)
आगंतुक पटल : 58
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Odia
,
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Assamese
,
Manipuri
,
Bengali
,
Bengali-TR
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Kannada
,
Malayalam