பிரதமர் அலுவலகம்
இந்தோ-திபெத்திய எல்லைக் காவல் படையின் உதய தினத்தை முன்னிட்டு பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்
प्रविष्टि तिथि:
24 OCT 2025 7:49PM by PIB Chennai
இந்தோ-திபெத்திய எல்லைக் காவல் படையின் உதய தினத்தை முன்னிட்டு வீரர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். படைவீரர்கள், நாட்டிற்கு ஆற்றும் உன்னதமான சேவையைக் குறிப்பிட்ட பிரதமர், வீரர்களின் துணிச்சல், ஒழுக்கம் மற்றும் கடமையில் அவர்களது திடமான உறுதிப்பாட்டைப் பாராட்டினார். சேவை மற்றும் மனிதாபிமானத்தின் சீரிய பாரம்பரியங்களை பிரதிபலிக்கும் வகையில், பேரிடர் நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளின் போது வீரர்களின் கனிவு மற்றும் தயார் நிலையையும் பிரதமர் பாராட்டினார்.
சமூக ஊடக எக்ஸ் தள பதிவில் திரு மோடி குறிப்பிட்டதாவது:
“உதய தினத்தை முன்னிட்டு இந்தோ-திபெத்திய எல்லைக் காவல் படையின் வீரர்களுக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும் நல்வாழ்த்துகள். ஈடு இணையற்ற துணிச்சல், ஒழுக்கம் மற்றும் கடமையில் அர்ப்பணிப்பு முதலியவற்றை இந்தப் படை வெளிப்படுத்துகிறது. மிகவும் கடினமான கால நிலைகளிலும், மிகுந்த சவாலான பிரதேசங்களிலும் சேவையாற்றி, அவர்கள் திடமான உறுதிபாட்டுடன் நாட்டை பாதுகாக்கிறார்கள். பேரிடர் நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளின் போது வீரர்களின் கனிவு மற்றும் தயார் நிலை, சேவை மற்றும் மனிதாபிமானத்தின் சீரிய பாரம்பரியங்களை பிரதிபலிக்கின்றன.
@ITBP_official”
(Release ID: 2182298)
***
SS/BR/SH
(रिलीज़ आईडी: 2182345)
आगंतुक पटल : 18
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Malayalam
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Assamese
,
Manipuri
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada