சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

வனப் பரப்பளவில் இந்தியா உலகளவில் 9-வது இடத்திற்கு முன்னேற்றம்; வருடாந்திர வன ஆதாயத்தில் தொடர்ந்து 3-வது இடத்தில் உள்ளது

Posted On: 22 OCT 2025 10:42AM by PIB Chennai

பாலித் தீவில் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு (எப்ஏஓ) வெளியிட்ட உலகளாவிய வன வள மதிப்பீடு 2025-ன் படி, உலகளாவிய சுற்றுச்சூழல் பாதுகாப்பில் இந்தியா ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல் சாதனையை எட்டியுள்ளது. உலகளவில் மொத்த வனப் பரப்பளவில் 9-வது இடத்திற்கு அது முன்னேறியுள்ளது.

மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத்துறை  அமைச்சர் திரு பூபேந்தர் யாதவ், சமூக ஊடக எக்ஸ் பதிவில்   இந்த வளர்ச்சியைப் பற்றி தெரிவித்துள்ளார்.

முந்தைய மதிப்பீட்டில், இந்தியா 10-வது இடத்தில் இருந்தது. வருடாந்திர வனப் பரப்பளவு ஆதாயத்தின் அடிப்படையில் இந்தியா உலகளவில் 3-வது இடத்தைப் பிடித்துள்ளது. இது நிலையான வன மேலாண்மை மற்றும் சுற்றுச்சூழல் சமநிலைக்கான அதன் அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துகிறது என்று அமைச்சர் தெரிவித்தார்.

இந்தக் குறிப்பிடத்தக்க முன்னேற்றம், பிரதமர் திரு  நரேந்திர மோடியின் தலைமையில், வனப் பாதுகாப்பு, காடு வளர்ப்பு மற்றும் சமூகம் தலைமையிலான சுற்றுச்சூழல் நடவடிக்கையை இலக்காகக் கொண்ட மத்திய அரசின் கொள்கைகள் மற்றும் திட்டங்களின் வெற்றியை விளக்குகிறது என்று திரு யாதவ் குறிப்பிட்டுள்ளார்.

பிரதமரின் 'தாயின் பெயரில் ஒரு மரக்கன்று' என்னும் அழைப்பும், சுற்றுச்சூழல் விழிப்புணர்வு மீதான அவரது தொடர்ச்சியான முக்கியத்துவமும், நாடு முழுவதும் உள்ள மக்களை மரம் நடுதல் மற்றும் பாதுகாப்பில் தீவிரமாக பங்கேற்க தூண்டியுள்ளது.

வளர்ந்து வரும் பொதுமக்களின் பங்களிப்பு, பசுமையான மற்றும் நிலையான எதிர்காலத்தை நோக்கிய வலுவான கூட்டுப் பொறுப்புணர்வை வளர்த்து வருகிறது. காடுகளைப் பாதுகாத்தல் மற்றும் மேம்படுத்துதல் மற்றும் மாநில அரசுகளின் முயற்சிகளுக்கான மோடி அரசின் திட்டமிடல் மற்றும் கொள்கைகளின் பின்னணியில் இந்தச் சாதனை சாத்தியமானது என்று அமைச்சர் கூறியுள்ளார்.

***

(Release ID: 2181416)

SS/PKV/RJ


(Release ID: 2181522) Visitor Counter : 22