பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

என்டிடிவி உலக உச்சி மாநாடு 2025 -ல் ஆற்றிய உரையின் வீடியோபதிவுகளை பிரதமர் பகிர்ந்துள்ளார்

Posted On: 18 OCT 2025 12:19PM by PIB Chennai

புதுதில்லியில் நடைபெற்ற என்டிடிவி உலக உச்சி மாநாடு, 2025 -ல் பிரதமர் திரு நரேந்திர மோடி ஆற்றிய உரையின் வீடியோ காட்சிகளை பகிர்ந்து கொண்டுள்ளார். இந்த மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய பிரதமர், இம்மாநாட்டில் பங்கேற்பதற்காக வருகை தந்துள்ள அனைத்து பிரமுகர்களையும் வரவேற்றார். அனைத்து மக்களுக்கும் தீபாவளி நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்ட  பிரதமர் திரு மோடி, என்டிடிவி உலக உச்சி மாநாடு பண்டிகைக் கால சூழலில் நடைபெறுவதாகக் குறிப்பிட்டார். "தடுக்க முடியாத வேகத்தில் முன்னேற்றப் பாதையில் பயணிக்கும் இந்தியா" என்ற கருப்பொருளுடன் இம்மாநாடு நடைபெறுவதற்கு அவர் பாராட்டுத் தெரிவித்தார். மேலும் இந்த தலைப்பு மிகவும் பொருத்தமானது என்றும் அவர் குறிப்பிட்டார், ஏனெனில், இன்று வளர்ச்சிக்கான நடவடிக்கைகளை நிறுத்தும் எண்ணம் இந்தியாவிற்கு இல்லை என்று உறுதிப்படத் தெரிவித்தார். "வளர்ச்சிக்கான நடவடிக்கைகளை இந்தியா தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ ஒருபோதும் நிறுத்தாது என்றும், 140 கோடி இந்திய மக்கள் ஒன்றிணைந்து, வளர்ச்சியை நோக்கி விரைவாக முன்னேறிச் செல்கின்றனர்" என்றும் பிரதமர் திட்டவட்டமாகக் கூறினார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் திரு. மோடி வெளியிட்டுள்ள பதிவில்  கூறியிருப்பதாவது:

"கடந்த 11 ஆண்டுகளில், இந்தியா ஒவ்வொரு நிலையிலும் அச்சங்களை  அகற்றி, ஒவ்வொரு சவாலையும் கடந்து வந்துள்ளது. அதனால்தான் இன்று ஒவ்வொரு துறையிலும் தன்னிறைவுடன் கூடிய இந்தியாவாக  உருவெடுக்க வேண்டும் என்ற வலுவான நம்பிக்கையை நாம் காண முடிகிறது."

"இன்று, உலக நாடுகள் அனைத்தும் இந்தியாவை நம்பகத்தன்மை, பொறுப்புணர்வு மற்றும் நெகிழ்வுத்தன்மை கொண்ட நட்பு நாடாகப் பார்க்கிறது"

"ஒவ்வொரு மதிப்பீட்டையும் விஞ்சும் வகையில் செயல்படுவதே நாட்டின் நெறிமுறையாக மாறியுள்ளது. அதனால் தான் இந்தியா தடுக்க இயலாத சக்தியாக உருவெடுத்து வருகிறது."

"பல தசாப்தங்களாக ஆட்சிப்பொறுப்பில் இருந்த காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில், எப்போதும் கொள்கை மற்றும் செயல்முறையில் தேசியமயமாக்கலை வலியுறுத்தி வந்துள்ளது. அதே நேரத்தில், கடந்த 11 ஆண்டுகளில், ஜனநாயகமயமாக்கலை நோக்கி நாங்கள் தொடர்ந்து பணியாற்றி வருகிறோம். வங்கி உட்பட பல்வேறு துறைகளை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளே இதன் விளைவாகும்."

"பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட 4ஜி அலைவரிசை கோபுரங்களை அறிமுகப்படுத்துவது அல்லது அதிவேக இணையதள இணைப்பை அடிப்படையாகக் கொண்ட -சஞ்சீவனி சேவையைத் தொடங்குவது என எதுவாக இருந்தாலும், ஏழைகள் மற்றும் பின்தங்கிய மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் மத்திய அரசு எவ்வளவு உணர்திறனுடன் செயல்படுகிறோம் என்பதை இவை நிரூபிக்கின்றன."

"நாட்டு குடிமக்களின் வாழ்வியல் முறையை எளிதாக்குவதிலும், அவர்களின் சேமிப்பை அதிகரிப்பதிலும் மத்திய அரசு கவனம் செலுத்தி வருகிறது. வருமான வரி, சரக்கு மற்றும் சேவை வரி விகிதம் கணிசமான குறைக்கப்பட்டுள்ளதே இதற்கு நேரடி சான்றாகும்."

"மாவோயிஸ்ட் பயங்கரவாதத்தால் தங்களது மகன்களை இழந்த தாய்மார்களின் வலியை நான் அறிவேன். அவர்களில் பெரும்பாலோர் ஏழை மற்றும் பழங்குடியின குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். அந்த தாய்மார்களின் ஆசியுடன், நாடு விரைவில் மாவோயிஸ்ட் பயங்கரவாதத்திலிருந்து முற்றிலும் விடுபடும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்."

******

(Release ID: 2180655)

AD/SV/SG

 

 

 


(Release ID: 2180797) Visitor Counter : 10