பிரதமர் அலுவலகம்
பிரதமர் திரு நரேந்திர மோடியை இலங்கைப் பிரதமர் இன்று சந்தித்தார்
प्रविष्टि तिथि:
17 OCT 2025 4:25PM by PIB Chennai
இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசின் பிரதமர் டாக்டர் ஹரிணி அமரசூரியா இன்று பிரதமர் திரு நரேந்திர மோடியை சந்தித்தார்.
அவரை அன்புடன் வரவேற்ற பிரதமர், வரலாற்று சிறப்புமிக்க, பன்முக தன்மை கொண்ட இந்தியா-இலங்கை உறவுகளுக்கு அவரது வருகை புதிய உத்வேகத்தை அளிக்கும் என்றார்.
இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் தாம் இலங்கையில் மேற்கொண்ட அரசுமுறை பயணத்தை நினைவுகூர்ந்த பிரதமர், அப்போது ஒத்துழைப்பிற்கான அனைத்து துறைகளையும் உள்ளடக்கி அதிபர் அனுர குமார திசநாயகாவுடன் பயனுள்ள விவாதங்களை நடத்தியதாக கூறினார்.
கல்வி, தொழில்நுட்பம், புத்தாக்க மேம்பாட்டில் ஒத்துழைப்பு, மீனவர்கள் நலன் உட்பட பல துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர்.
இந்தியா-இலங்கை இடையேயான சிறப்பு உறவுகளை எடுத்துரைத்த பிரதமர், இருநாடுகளின் பகிரப்பட்ட வளர்ச்சிப் பயணத்தில் ஒருங்கிணைந்து பணியாற்றும் இந்தியாவின் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிசெய்தார்.
அதிபர் திசநாயகாவுக்கு தமது அன்பான வாழ்த்துகளை தெரிவித்த பிரதமர் தங்களின் தொடர்ச்சியான பணி ஈடுபாடுகளை தாம் எதிர்நோக்கி இருப்பதாகவும் தெரிவித்தார்.
***
(Release ID: 2180356)
SS/SMB/AG/SH
(रिलीज़ आईडी: 2180546)
आगंतुक पटल : 20
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam