உள்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இந்தியா எல்லைப் பாதுகாப்புடன் சட்டத்தின் ஆட்சியை வலுப்படுத்துவதை உறுதி செய்கிறது- மத்திய அமைச்சர் திரு அமித் ஷா

Posted On: 16 OCT 2025 4:06PM by PIB Chennai

புதுதில்லியில் மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) ஏற்பாடு செய்திருந்த ‘தலைமறைவுக் குற்றவாளிகளை திரும்பக் கொண்டு வருதல்: சவால்கள் மற்றும் உத்திகள்’ என்ற தலைப்பில் நடைபெற்ற மாநாட்டிற்கு மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு அமித் ஷா சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு இன்று உரையாற்றினார். மத்திய உள்துறைச் செயலாளர், வெளியுறவுச் செயலாளர், புலனாய்வு அமைப்பு இயக்குநர், சிபிஐ இயக்குநர் உள்ளிட்ட பல்வேறு பிரமுகர்கள் இதில் கலந்து கொண்டனர்.

அப்போது பேசிய திரு அமித் ஷா, பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையின் கீழ், நமது நாடு உலக அளவில் நம்பிக்கையுடன் முன்னேறுவதாகக் கூறினார். தேசிய பாதுகாப்பின் அனைத்து பரிமாணங்களும் மிக முக்கியம் என்பது உறுதி செய்யப்பட வேண்டும் என்பதை அவர் வலியுறுத்தினார். நாட்டில் ஊழல், குற்றம், மற்றும் தீவிரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் சூழலில், இந்திய எல்லைகளுக்கு அப்பால் நடைபெறும் இது போன்ற நடவடிக்கைகளுக்கு எதிராக நாம் அவசியம் செயல்பட வேண்டும் என்று கூறினார்.

இது போன்ற அனைத்து குற்றவாளிகளையும் இந்திய சட்டத்தின் முன் கொண்டு வருவது நமது பொறுப்பு என்றும் அதற்கான முறைகளை உருவாக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

இன்டர்போல் மற்றும் மூன்று புதிய குற்றவியல் சட்டங்களின் கீழ் கூட்டப்பட்டுள்ள இந்த மாநாடு, இந்திய நீதிமன்றங்களில் தப்பியோடிய குற்றவாளியை ஆஜர்படுத்துவதற்கான ஒருங்கிணைந்த முயற்சியாகும் என்றும் மேலும் அதை அடைவதற்கான ஒரு வழிகாட்டுதலையும் வழங்குகிறது என்றும் அவர் குறிப்பிட்டார். சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு தான் அளித்த ஆலோசனையின் பேரில், சிபிஐ தலைமறைவு குற்றவாளியை நாடுகடத்தும் கருத்தை களத்தில் செயல்படுத்தியுள்ளது என்றும், இதற்காக அந்த அமைப்பைப் பாராட்டுவதாகவும் அவர் கூறினார்.

ஒரு குற்றவாளி எவ்வளவு சூழ்ச்சிக்காரராக இருந்தாலும், நீதி கிடைப்பது இன்னும் விரைவாக இருக்க வேண்டும் என்பது நமது கூட்டுத் தீர்மானமாக இருக்க வேண்டும் என்று திரு அமித் ஷா கூறினார். இந்த மாநாட்டின் போது பரிந்துரைக்கப்பட்ட விவாதங்கள் மற்றும் நடவடிக்கைகள் தேசிய பாதுகாப்பு, நாட்டின் பொருளாதார வளமை மற்றும் கொள்கை சிக்கல்களை எதிர்கொள்வதற்கு மிகவும் பயனுள்ளதாக அமையும் என்று கூறினார். சைபர் தொழில்நுட்பம், நிதிசார் குற்றங்கள், நிதி ஆதாரங்களைக் கண்டறிதல், சிக்கலான நாடுகடத்தல் செயல்முறைகளை எளிதாக்குதல், தப்பியோடியவர்களை மீண்டும் கொண்டு வருதல், அவர்களின் இருப்பிடங்களின் தரவுத்தளத்தை உருவாக்குதல் மற்றும் சர்வதேச காவல்துறையுடன் ஒத்துழைப்பதன் மூலம் இந்த வழிமுறையைப் பயன்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் ஏழு அமர்வுகளில் தேவையான விவாதங்கள் இந்த மாநாட்டில் இடம்பெறும் என்று திரு அமித் ஷா எடுத்துரைத்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2179886  

***

SS/IR/KPG/SH


(Release ID: 2180108) Visitor Counter : 8