பிரதமர் அலுவலகம்
வனவிலங்கு பாதுகாப்பில் இந்தியாவின் சிறப்பான செயல்பாடுகளை எடுத்துரைக்கும் கட்டுரையை பிரதமர் பகிர்ந்துள்ளார்
प्रविष्टि तिथि:
08 OCT 2025 12:16PM by PIB Chennai
கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக வனவிலங்கு பாதுகாப்பில் இந்தியாவின் சிறப்பான செயல்பாடுகளை விளக்கும் வகையில் மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு பூபேந்தர் யாதவ் எழுதியுள்ள கட்டுரையை பிரதமர் பகிர்ந்துள்ளார்.
சுற்றுச்சூழல் நிலைத்தன்மைக்கு இந்தியாவின் வலுவான உறுதிப்பாட்டை பிரதிபலிக்கும் வகையில், உயிரினங்களைப் பாதுகாப்பதற்கும் அழிந்த வாழ்விடங்களை மீட்பதற்கும் அரசின் முயற்சிகளை இந்தக் கட்டுரை சுட்டிக்காட்டுகிறது.
இது அமிர்த காலத்தில் புலிகள் பாதுகாப்பு குறித்த தொலைநோக்குப் பார்வை (Tiger@2047), பனிச்சிறுத்தை திட்டம், சிறுத்தை திட்டம் மற்றும் டால்பின் திட்டம் போன்ற முக்கிய முயற்சிகளை எடுத்துரைக்கிறது.
மத்திய அமைச்சர் எழுதியுள்ள கட்டுரைக்கு திரு மோடி பதிலளித்திருப்பதாவது:
“கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக உயிரினங்களை பாதுகாப்பதையும், அழிந்த வாழ்விடங்களை மீட்பதையும் நோக்கமாக கொண்டு எவ்வாறு இந்தியாவின் வனவிலங்கு பாதுகாப்பு முயற்சிகள் சிறப்பாக செயல்பட்டுள்ளது என்பது குறித்து இக்கட்டுரையில் மத்திய அமைச்சர் திரு பூபேந்தர் யாதவ் விளக்கியுள்ளார்.
அமிர்த காலத்தில் புலிகள் பாதுகாப்பு குறித்த தொலைநோக்குப் பார்வை (Tiger@2047),, பனிச்சிறுத்தை திட்டம், சிறுத்தை திட்டம் மற்றும் டால்பின் திட்டம் போன்ற முன்முயற்சிகள் வனவிலங்கு பாதுகாப்பிற்கான நம்பிக்கையையும், மனஉறுதியையும் அளிப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.”
***
(Release ID: 2176150 )
SS/IR/AG/KR
(रिलीज़ आईडी: 2176263)
आगंतुक पटल : 135
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Assamese
,
Manipuri
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam