பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

இந்திய மொபைல் மாநாட்டின் 9-வது பதிப்பை பிரதமர் அக்டோபர் 8 அன்று தொடங்கி வைக்கிறார்

Posted On: 07 OCT 2025 10:27AM by PIB Chennai

ஆசியாவின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு, ஊடகம் மற்றும் தொழில்நுட்ப நிகழ்வான இந்திய மொபைல்  மாநாட்டின் 9-வது பதிப்பை பிரதமர் திரு நரேந்திர மோடி புதுதில்லி யஷோபூமியில் 2025 அக்டோபர் 8 அன்று காலை மணி 9.45-க்கு தொடங்கிவைக்கிறார். தொலைத்தொடர்புத் துறை, இந்திய செல்லுலார் சேவையாளர்கள் சங்கம் இணைந்து ஏற்பாடு செய்துள்ள இந்த மாநாடு அக்டோபர் 8 முதல் 11 வரை நடைபெறவுள்ளது. மாற்றத்திற்கான புதுமைக் கண்டுபிடிப்புகள் என்ற தலைப்பில், டிஜிட்டல் மாற்றத்திற்கான புதுமைக் கண்டுபிடிப்புகளில் இந்தியாவின் உறுதிப்பாடு குறித்து எடுத்துரைக்கப்பட உள்ளது.

தொலைத்தொடர்பு மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களில் சமீபத்திய முன்னேற்றங்கள் குறித்து உலகளாவிய தலைவர்கள், கொள்கை வகுப்பாளர்கள், தொழில்துறை நிபுணர்கள் மற்றும் புதுமைக் கண்டுபிடிப்பாளர்கள் இடையே எடுத்துக்காட்டப்பட உள்ளது. கண்ணாடி இழை தொலைத்தொடர்பு, தொலைத்தொடர்பில் செமி கண்டக்டர்கள், குவாண்டம் தொலைத்தொடர்பு, 6ஜி மற்றும் மோசடி எச்சரிக்கை உள்ளிட்ட முக்கியத் தலைப்புகளில் இந்த நிகழ்வு கவனம் செலுத்தும். அடுத்த தலைமுறை தொலைத்தொடர்பு, டிஜிட்டல் இறையாண்மை, இணையதளம் மோசடி தடுப்பு மற்றும் உலகளாவிய தொழில்நுட்ப தலைமைத்துவத்தில் இந்தியாவின் உத்திசார்ந்த முன்னுரிமைகளை இது பிரதிபலிக்கிறது.

150-க்கும் அதிகமான  நாடுகளைச் சேர்ந்த 1.5 லட்சம் பார்வையாளர்கள், 7,000-க்கும் அதிகமான உலகளாவிய பிரதிநிதிகள் மற்றும் 400-க்கும் மேற்பட்ட நிறுவனங்களின் பிரதிநிதிகள் இதில் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  5ஜி / 6ஜி, செயற்கை நுண்ணறிவு, இணையப் பாதுகாப்பு, குவாண்டம் கம்ப்யூட்டிங் மற்றும் பசுமைத் தொழில்நுட்பம் போன்ற துறைகளில் 100-க்கும் அதிகமான அமர்வுகள் நடைபெறும். 800-க்கும் மேலான விரிவுரையாளர்கள் இதில் பங்கேற்க உள்ளனர்.

ஜப்பான், கனடா, இங்கிலாந்து, ரஷ்யா, அயர்லாந்து, ஆஸ்திரியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகளுடன் சர்வதேச ஒருங்கிணைப்பையும், இந்திய மொபைல் மாநாடு 2025 சுட்டிக்காட்டுகிறது.

***

(Release ID: 2175639 )

SS/IR/KPG/KR


(Release ID: 2175696) Visitor Counter : 18