பிரதமர் அலுவலகம்
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, நீதியரசர் பி ஆர் கவாய் மீது நிகழ்த்தப்பட்ட தாக்குதலுக்கு பிரதமர் கண்டனம் தெரிவித்துள்ளார்
Posted On:
06 OCT 2025 8:45PM by PIB Chennai
உச்சநீதிமன்ற வளாகத்தில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, நீதியரசர் பி ஆர் கவாய் மீது நடத்தப்பட்ட தாக்குதலை பிரதமர் திரு நரேந்திர மோடி வன்மையாகக் கண்டித்துள்ளார்.
இந்த சம்பவத்திற்கு பிறகு நீதிபதி கவாய்யுடன் பேசிய திரு மோடி, தாக்குதலைப் பொருட்படுத்தாது, அவர் அமைதியையும் நிதானத்தையும் கடைப்பிடித்ததற்குப் பாராட்டு தெரிவித்தார்.
இது தொடர்பாக சமூக ஊடக எக்ஸ் தள பதிவில் பிரதமர் கூறியிருப்பதாவது:
“உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, நீதியரசர் பி ஆர் கவாய் அவர்களிடம் பேசினேன். முன்னதாக இன்று உச்சநீதிமன்ற வளாகத்தில் அவர் மீது நிகழ்த்தப்பட்ட தாக்குதல் ஒவ்வொரு இந்தியரையும் வெகுண்டெழச் செய்துள்ளது. நமது சமூகத்தில் இதுபோன்ற கண்டிக்கத்தக்க செயல்பாடுகளுக்கு ஒருபோதும் இடமில்லை. இது முற்றிலும் கண்டிக்கத்தக்கது.
இது போன்ற சந்தர்ப்பத்திலும் நீதிபதி கவாய் வெளிப்படுத்திய அமைதியை நான் பாராட்டினேன். நீதியின் மாண்புகளிலும், நமது அரசியலமைப்பு உணர்வை வலுப்படுத்துவதிலும் அவர் கொண்டுள்ள உறுதிப்பாட்டை இது எடுத்துக்காட்டுகிறது.”
(Release ID: 2175572)
***
SS/BR/SH
(Release ID: 2175605)
Visitor Counter : 13
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Bengali
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Kannada
,
Malayalam