பிரதமர் அலுவலகம்
மத்தியப் பிரதேசத்தின் காண்ட்வா மாவட்டத்தில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல்
இடுகை இடப்பட்ட நாள்:
02 OCT 2025 11:36PM by PIB Chennai
மத்தியப் பிரதேசம் மாநிலம் காண்ட்வா மாவட்டத்தில் ஏற்பட்ட விபத்தில் நேரிட்ட உயிரிழப்புகளுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி தனது ஆழ்ந்த வருத்தங்களைத் தெரிவித்துள்ளார். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்குப் பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து தலா ரூ. 2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 50,000-மும் வழங்கப்படும் என்று பிரதமர் அறிவித்துள்ளார்.
பிரதமர் தனது எக்ஸ் சமூக ஊடகப் பதிவில் குறிப்பிட்டிருப்பதாவது:
"மத்தியப் பிரதேசம், காண்ட்வா மாவட்டத்தில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்கள் குறித்து நான் மிகுந்த துயரமடைந்தேன். இந்தத் துயரமான நேரத்தில், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையப் பிரார்த்திக்கிறேன்.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்குப் பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து ரூ. 2 லட்சம் வழங்கப்படும். காயமடைந்தவர்களுக்கு ரூ. 50,000 வழங்கப்படும். - பிரதமர் @narendramodi"
****
(RELEASE ID: 2174326)
SS/SE/SG
(வெளியீட்டு அடையாள எண்: 2174516)
வருகையாளர் எண்ணிக்கை : 23
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Assamese
,
Manipuri
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam