பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

தில்லியில் நடைபெறும் உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டி வீரர்களுக்குப் பிரதமர் வரவேற்பு

Posted On: 27 SEP 2025 6:03PM by PIB Chennai

இன்று தொடங்கும் உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் 2025- இந்தியா பெருமையுடன் புதுதில்லியில் நடத்தும் நிலையில், அனைத்து விளையாட்டு வீரர்கள் மற்றும் பிரதிநிதிகளை அன்புடன் வரவேற்பதாக பிரதமர் திரு நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் திரு மோடி பதிவிட்டுள்ளதாவது;

"இன்று தொடங்கும் உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் 2025- தில்லியில் நடத்துவதில் இந்தியா பெருமை கொள்கிறது. பங்கேற்பாளர்கள் அனைவருக்கும் அன்பான வரவேற்பு மற்றும் வாழ்த்துகள். இந்தப் போட்டி மனித உறுதியையும், எழுச்சியையும் கொண்டாடுகிறது. இந்தப் போட்டி உலகம் முழுவதும் உள்ளடக்கிய மற்றும் துடிப்பான விளையாட்டுக் கலாச்சாரத்தை ஊக்குவிக்கட்டும்."

***

(Release ID: 2172187)

AD/PKV/RJ


(Release ID: 2172254) Visitor Counter : 8