பிரதமர் அலுவலகம்
இந்தியாவில் தயாரிப்போம் திட்டத்தின் 11 ஆண்டுகள் – பிரதமர் மகிழ்ச்சி
प्रविष्टि तिथि:
25 SEP 2025 1:01PM by PIB Chennai
இந்தியாவில் தயாரிப்போம் திட்டத்தின் 11-ம் ஆண்டு நிறைவையொட்டி பிரதமர் திரு நரேந்திர மோடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். நாட்டில் பொருளாதார சூழல், தொழில்முனைவோர் அமைப்பு ஆகியவற்றில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் இந்த இயக்கத்தின் தாக்கம் அமைந்துள்ளதாக அவர் கூறியுள்ளார். நாட்டில் தொழில்முனைவோருக்கு இந்த இயக்கத்தின் மூலம் உத்வேகம் அளிக்கப்பட்டதாகவும் அதன் வாயிலாக உலகளாவிய தாக்கம் ஏற்பட்டுள்ளதாகவும் திரு நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து மைகவ் தளத்தில் வெளியான பதிவுகளுக்கு பதிலளிக்கும் வகையில் சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி, வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-
“நாட்டின் வளர்ச்சிக்கு உத்வேகம் அளிக்கவும், தொழில் முனைவோரின் திறனை மேம்படுத்தவும் தொலைநோக்குப் பார்வையுடன் கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் இந்தியாவில் தயாரிப்போம் திட்டம் தொடங்கப்பட்டது.
11 ஆண்டுகளில் பொருளாதார வளர்ச்சியை வலுப்படுத்தவும், தற்சார்பு இந்தியா என்ற இலக்கை வலுப்படுத்தவும் இத்திட்டம் சிறந்த பங்களிப்பை வழங்கியுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. இது பல்வேறு துறைகளில் புதுமைகளையும், வேலைவாய்ப்புகளையும் உருவாக்கியுள்ளது.”
“இந்தியாவில் தயாரிப்போம் திட்டம் நாட்டில் தொழில்முனைவோருக்கு உத்வேகத்தை அளித்து, உலகளாவிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. #11YearsOfMakeInIndia"
***
(Release ID: 2171059)
SS/PLM/AG/SH
(रिलीज़ आईडी: 2171382)
आगंतुक पटल : 36
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Bengali-TR
,
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Kannada
,
Malayalam