பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

பொது சுகாதாரத்தை மேம்படுத்துவதிலும், பொருளாதாரத்தை வலுப்படுத்துவதிலும் மத்திய அரசின் முன்னோடி திட்டங்களின் தாக்கத்தை பிரதமர் எடுத்துரைத்தார்

प्रविष्टि तिथि: 24 SEP 2025 1:12PM by PIB Chennai

தேசிய வளர்ச்சியின் முக்கியத் தூணாக இந்தியாவின் சுகாதாரத் துறை மாற்றம் பெற்று வருவதற்கு அதிகரித்து வரும் அங்கீகாரத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று எடுத்துரைத்தார். புகழ்பெற்ற இதய அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் தேவி பிரசாத் ஷெட்டி தனது சமீபத்திய கட்டுரை ஒன்றில், ஆயுஷ்மான் பாரத், போஷான் அபியான் மற்றும் தூய்மை இந்தியா போன்ற  மத்திய அரசின் முன்னோடி திட்டங்கள் பொது சுகாதாரத்தை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல், பொருளாதாரத்தையும் எவ்வாறு வலுப்படுத்துகின்றன என்பதை எடுத்துரைத்தார்.

பிரதமர் தனது எக்ஸ் சமூக ஊடக பதிவில் கூறியிருப்பதாவது:

“டாக்டர் தேவி பிரசாத் ஷெட்டி, இந்தியாவின் சுகாதாரம் தற்போது பொருளாதார வளர்ச்சியின் முக்கிய உந்துசக்தியாக விளங்குகிறது என்று எழுதியுள்ளார். ஆயுஷ்மான் பாரத், போஷான் அபியான் மற்றும் தூய்மை இந்தியா போன்ற திட்டங்கள் நோய்களைக் குறைத்து, குடும்பங்களின் சேமிப்பைப் பாதுகாத்து, மனித மூலதனத்தை உருவாக்குகின்றன. சுகாதாரத்தை ஒரு செலவாகக் கருதாமல், முதலீடாகக் காண்பது ஆளுமையையும் செழிப்பையும் மேம்படுத்துகிறது.”

***

(Release ID: 2170504)

SS/SE/SH

 


(रिलीज़ आईडी: 2170854) आगंतुक पटल : 44
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Odia , Marathi , English , Urdu , हिन्दी , Bengali , Bengali-TR , Assamese , Manipuri , Punjabi , Gujarati , Telugu , Kannada , Malayalam