மனித வள மேம்பாட்டு அமைச்சகம்
பள்ளி மாணவர்கள் பங்கேற்கும் புதுமை கண்டுபிடிப்புகள் இயக்கம் – மத்திய அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான் தொடங்கிவைத்தார்
Posted On:
23 SEP 2025 5:25PM by PIB Chennai
நாடு தழுவிய அளவில் பள்ளி மாணவர்கள் பங்கேற்கும் வளர்ச்சியடைந்த இந்தியா பில்டத்தான்-2025 புதுமை கண்டுபிடிப்புகள் இயக்கத்தை மத்திய கல்வி அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான் இன்று தொடங்கிவைத்தார். இதற்கான பாடல் மற்றும் இலச்சினை ஆகியவற்றை அமைச்சர் வெளியிட்டார்.
பள்ளிக்கல்வி மற்றும் எழுத்தறிவுத்துறை செயலாளர் திரு சஞ்சய் குமார், கூடுதல் செயலாளர் தீரஜ் சாஹூ, பத்திரிகை தகவல் அலுவலக முதன்மை இயக்குநர் திரு தீரேந்திர ஓஜா, ஏஐசிடிஇ நிறுவனத்தின் தலைவரும், பேராசிரியருமான டிஜி சீதாராம், நித்தி ஆயோகின் அடல் புத்தாக்க இயக்கத்தின் இயக்குநர் தீபக் பார்லா உட்பட பல்வேறு துறைகளின் மூத்த அதிகாரிகள் இதில் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், இந்த முயற்சி மாணவர்களின் புதுமை கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கும் என்றும் தன்னிறைவு பெற்ற இந்தியாவிற்கு இளைய தலைமுறையினர் முக்கிய பங்காற்றுவதை இது உறுதிசெய்யும் என்றும் கூறினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2170192
***
SS/GK/AG/SH
(Release ID: 2170405)