பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

திறன்மிகு அங்கன்வாடி இயக்கம் மற்றும் போஷான் 2.0 திட்டம் குறித்த கட்டுரையைப் பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார்.

Posted On: 19 SEP 2025 11:51AM by PIB Chennai

குழந்தைகள், வளரிளம் பெண்கள் மற்றும் கர்ப்பிணிப் பெண்களின் ஊட்டச்சத்தை மேம்படுத்துவதில் திறன்மிகு அங்கன்வாடி இயக்கம் மற்றும் போஷான் 2.0 திட்டத்தின்  முக்கியப் பங்கைப் பற்றி மத்திய அமைச்சர் திருமதி அன்னபூர்ணா தேவி எழுதிய ஒரு கட்டுரையை பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார். “இந்தத் திட்டங்கள் மூலம், நாடு முழுவதும் விரிந்து பரந்துள்ள அங்கன்வாடி மையங்களின் மிகப்பெரிய வலையமைப்பு வழியாக கோடிக்கணக்கான பயனாளிகள் பலன் பெற்று வருகின்றனர்,” என்று பிரதமர் தெரிவித்தார்.

மத்திய அமைச்சர் திருமதி அன்னபூர்ணா தேவி அவர்களின் எக்ஸ் சமூக வலைதளப் பதிவுக்குப் பதிலளிக்கும் விதமாக, பிரதமர் திரு நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளதாவது:

"திறன்மிகு அங்கன்வாடி இயக்கம் மற்றும் போஷான் 2.0 திட்டம் குழந்தைகள், இளம் பெண்கள் மற்றும் கர்ப்பிணித் தாய்மார்களின் ஊட்டச்சத்தை மேம்படுத்துவதற்காக எடுக்கப்பட்ட முக்கிய முயற்சி. இதன் கீழ், நாடு முழுவதும் பரவியுள்ள அங்கன்வாடி மையங்களின் பரந்த வலையமைப்பின் வழியாக கோடிக்கணக்கான பயனாளிகளுக்கு உதவி கிடைக்கிறது. பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் இந்தத் திட்டம் எவ்வாறு  கோடிக்கணக்கான குழந்தைகளின் எதிர்காலத்தை மேம்படுத்துகிறது என்பதை மத்திய அமைச்சர் அன்னபூர்ணா தேவி  தனது கட்டுரையில் விரிவாக விளக்கியுள்ளார்..."

                                    **

(ReleaseID: 2168353)

SS/EA/RJ


(Release ID: 2168921)