பிரதமர் அலுவலகம்
மத்திய அமைச்சர் திரு மன்சுக் மாண்டவியா எழுதிய கட்டுரையை பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார்
Posted On:
16 SEP 2025 2:40PM by PIB Chennai
அன்றாட வாழ்வில், ‘சப்கா சாத், சப்கா விகாஸ், சப்கா விஸ்வாஸ், சப்கா பிரயாஸ்’ (அனைவரின் ஆதரவு, அனைவரின் வளர்ச்சி, அனைவரின் நம்பிக்கை, அனைவரின் முயற்சி) என்ற கொள்கை எவ்வாறு வெளிப்படுகிறது என்பதைப் பற்றி மத்திய அமைச்சர் திரு மன்சுக் மாண்டவியா எழுதிய கட்டுரையை பிரதமர் பகிர்ந்துள்ளார். மின்சாரம் இனி ஆடம்பரமல்ல, நலத்திட்டங்கள் நேரடியாக வழங்கப்படுகின்றன மற்றும் உள்கட்டமைப்பு டிஜிட்டல் ஒருங்கிணைப்புடன் திட்டமிடப்படுகிறது.
மத்திய அமைச்சர் திரு மன்சுக் மாண்டவியாவின் எக்ஸ் சமூக வலைத்தளப் பதிவுக்கு பிரதமர் பதிலளித்து கூறியதாவது: “இந்தக் கட்டுரையில், மத்திய அமைச்சர் @mansukhmandviya, ‘சப்கா சாத், சப்கா விகாஸ், சப்கா விஸ்வாஸ், சப்கா பிரயாஸ்’ அன்றாட யதார்த்தங்களில் தெளிவாகத் தெரிகிறது, மின்சாரம் இனி ஒரு ஆடம்பரமல்ல, நலத்திட்டங்கள் நேரடியாக வழங்கப்படுகின்றன மற்றும் உள்கட்டமைப்பு டிஜிட்டல் ஒருங்கிணைப்புடன் திட்டமிடப்பட்டுள்ளது என்று எழுதியுள்ளார்.
முதலில் குஜராத்தில் சோதிக்கப்பட்டு, பின்னர் பிரதமர் @narendramodi-ஆல் தேசிய அளவில் செயல்படுத்தப்பட்ட இந்திய மாதிரி, நிர்வாகத்தை கடைக்கோடி மக்களுக்கும் கொண்டு சேர்த்துள்ளது. இந்தியாவின் நிர்வாக அமைப்பை வெறும் வாக்குறுதிகளை வழங்குவதிலிருந்து செயல்படுத்துவதாக மாற்றி, 2047-க்குள் வளர்ச்சியடைந்த பாரதத்திற்கான பாதையை வடிவமைத்து வருகிறது” என்று கூறியுள்ளார்.
***
(Release ID: 2167137)
SS/EA/KR
(Release ID: 2167451)
Visitor Counter : 2
Read this release in:
Bengali
,
Telugu
,
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Kannada
,
Malayalam