பிரதமர் அலுவலகம்
வடகிழக்கு மாநிலங்கள் எவ்வாறு நாட்டின் முன்னோடியாக மாறிவருகிறது என்பதை விளக்கும் கட்டுரையை பிரதமர் பகிர்ந்துள்ளார்
இடுகை இடப்பட்ட நாள்:
12 SEP 2025 1:16PM by PIB Chennai
வடகிழக்கு மாநிலங்கள் எவ்வாறு நாட்டின் முன்னோடியாக மாறிவருகிறது என்பதை விளக்கும் கட்டுரை ஒன்றை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று பகிர்ந்துள்ளார். பைராபி – சாய்ராங் ரயில் பாதை தொடக்கம் என்பது மிசோராமை தேசிய ரயில்வே வலைப்பின்னலில் இணைத்து வணிகம், போக்குவரத்து, வேலைவாய்ப்பு ஆகியவற்றுக்கு புதிய கதவுகளை திறப்பதில் வரலாற்றுச் சிறப்புமிக்க ஒரு மைல்கல்லை எவ்வாறு குறிக்கிறது என்பதை மத்திய அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவின் கட்டுரை வலியுறுத்துவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் பதிவிட்டிருப்பதாவது:
“வடகிழக்கு என்பது முன்னேற்றத்திற்காக காத்திருக்கும் எல்லைப்பகுதியாக இல்லாமல் இந்தியாவின் வளர்ச்சிக் கதையின் மையமாக உள்ளது. பைராபி – சாய்ராங் ரயில் பாதை தொடக்கம் என்பது மிசோராமை தேசிய ரயில்வே வலைப்பின்னலில் இணைத்து வணிகம், போக்குவரத்து, வேலைவாய்ப்பு ஆகியவற்றுக்கு புதிய கதவுகளை திறப்பதில் வரலாற்றுச் சிறப்புமிக்க ஒரு மைல்கல்லை குறிக்கிறது.
மத்திய அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ் எழுதியுள்ள இந்தக் கட்டுரையைப் படியுங்கள். இது வடகிழக்கு மாநிலங்கள் எவ்வாறு நாட்டின் முன்னோடியாக மாறிவருகிறது என்பதை விவரிக்கிறது.”
------
(Release ID: 2165920)
AD/SMB/KPG/KR
(வெளியீட்டு அடையாள எண்: 2166007)
வருகையாளர் எண்ணிக்கை : 28
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam