உள்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

விரைவான குடியேற்ற அனுமதிக்கான சேவைகள் பயணிகளின் வசதியை மேம்படுத்துவதன் நாட்டின் பாதுகாப்பையும் வலுவடையச் செய்யும்- அமித் ஷா

Posted On: 11 SEP 2025 3:01PM by PIB Chennai

குடியேற்ற சேவைகளை விரைவுபடுத்தும் நடவடிக்கைகள் பயணிகளின் வசதியை மேம்படுத்துவதுடன் உள்நாட்டு பாதுகாப்பையும் வலுவடையச் செய்யும் என்று உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா தெரிவித்துள்ளார். லக்னோ, திருவனந்தபுரம், திருச்சி, கோழிக்கோடு மற்றும் அமிர்தசரசில் ஆகிய விமான நிலையங்களில் விரைவான  குடியேற்ற  அனுமதி மற்றும் பயணியர் நம்பிக்கை திட்டத்தை காணொலி வாயிலாக அவர் இன்று தொடங்கிவைத்தார். பின்னர் இந்நிகழ்ச்சியில் பேசிய அவர், நாட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் மாற்றங்களை அறிமுகப்படுத்தும் வகையிலும், பயணியரின் வசதியை கருத்தில் கொண்டும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்தார். பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையின் கீழ் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதாக அவர் கூறினார். இது உள்நாட்டு பாதுகாப்பையும் உறுதிசெய்வதற்கு உதவிடும் என்று அவர் தெரிவித்தார். பாஸ்போர்ட் மற்றும் வெளிநாட்டு குடியுரிமை பெற்றுள்ள இந்தியர்களுக்கான அடையாள அட்டைகளை வழங்கும் போது பதிவு நடைமுறைகளை மேற்கொள்ளவும் உதவுகிறது என்று கூறினார். இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதன் மூலம் வெளிநாடு செல்லும் பயணிகள் தங்களது பாஸ்போர்ட் மூலம் குடியேற்ற அனுமதியை பெறமுடியும் என்று கூறினார். இத்திட்டம் கடந்த ஆண்டு தில்லியிலும், அதனைத் தொடர்ந்து மும்பை, சென்னை, கொல்கத்தா, பெங்களூரூ, கொச்சி மற்றும் அகமதாபாத் விமான நிலையங்களில் ஏற்கனவே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார். இன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ள 5 விமான நிலையங்கள் உட்பட மொத்தம் 13 விமான நிலையங்களில் இத்திட்டம் செயல்பாட்டுக்கு வந்துள்ளதாக அவர் கூறினார். குடியேற்ற அனுமதியை 30 விநாடிகளுக்குள் பெற முடிவதாக அவர் கூறினார். இதன் மூலம் பயணிகள் நீண்டவரிசைகளில் காத்திருக்க வேண்டியதில்லை மற்றும் உடமைகளை சோதனையிடும் நடைமுறைகளில் புதிய அனுபவத்தை பெறமுடியும் என்று திரு அமித் ஷா கூறினார்.

                                                                                                                           ***

AD/SV/AG/SH


(Release ID: 2165789) Visitor Counter : 2