பிரதமர் அலுவலகம்
பிரதமர் திரு நரேந்திர மோடி உத்தரபிரதேசம் மற்றும் உத்தராகண்ட் மாநிலங்களுக்கு செப்டம்பர் 11 - ம் தேதி பயணம் மேற்கொள்கிறார்
மொரீஷியஸ் பிரதமரை வாரணாசியில் பிரதமர் வரவேற்கிறார்
இருதரப்பு ஒத்துழைப்பு குறித்து இரு தலைவர்களும் முழுமையான மதிப்பாய்வு செய்ய உள்ளனர்
மஹாசாகர் (கடல்சார் பிராந்தியப் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சிக்கான பரஸ்பர மற்றும் முழுமையான முன்னேற்றம்) என்ற தொலைநோக்குப் பார்வை மற்றும் 'அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை' என்ற இந்தியாவின் கொள்கைக்கு மொரிஷியஸ் முக்கிய நாடாக உள்ளது
வளம் மற்றும் நீடித்த வளர்ச்சியை நோக்கிய பயணத்தில் வாரணாசி உச்சி மாநாடு குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் குறிக்கிறது
டேராடூனில் வெள்ளப்பெருக்கால் ஏற்பட்டுள்ள நிலைமையை விமானம் மூலம் ஆய்வு செய்வதுடன் அது தொடர்பான ஆய்வுக் கூட்டம் பிரதமர் தலைமையில் நடைபெறவுள்ளது
Posted On:
10 SEP 2025 1:01PM by PIB Chennai
பிரதமர் திரு நரேந்திர மோடி உத்தரபிரதேசம் மற்றும் உத்தராகண்ட் மாநிலங்களுக்குச் செல்கிறார்.
வாரணாசியில் காலை 11:30 மணிக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி, மொரிஷியஸ் பிரதமர் டாக்டர் நவீன்சந்திர ராம்கூலமை வரவேற்கிறார். அரசு முறைப் பயணமாக மொரீஷியஸ் பிரதமர் டாக்டர் நவீன்சந்திர ராம்கூல செப்டம்பர் 9 முதல் 16 வரை இந்தியா வந்துள்ளார் .
இதனையடுத்து, டேராடூனுக்குச் செல்லும் பிரதமர், மாலை 4:15 மணிக்கு, உத்தராகாண்ட் மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை விமானம் மூலம் பார்வையிடுகிறார். மாலை 5 மணிக்கு பிரதமர் தலைமையில், துறை சார்ந்த உயர் அதிகாரிகளுடன் ஆய்வுக் கூட்டம் நடைபெறவுள்ளது.
வரலாற்றுச் சிறப்புமிக்க வாரணாசியில் இரு தலைவர்களுக்கும் இடையிலான சந்திப்பு, இந்தியா - மொரீஷியஸ் இடையே சிறப்பு மற்றும் தனித்துவ உறவுகள், நீடித்த நாகரிக தொடர்பு, ஆன்மீக பிணைப்புகள் மற்றும் ஆழமாக வேரூன்றியுள்ள மக்கள் தொடர்பு போன்ற அம்சங்களை எடுத்துக்காட்டும் வகையில் உள்ளது.
இந்த பேச்சுவார்த்தையின் போது, இரு நாடுகளும் இணைந்து செயல்படுவதற்கான வாய்ப்புக்கள் குறித்து இரு தலைவர்களும் ஆலோசனை நடத்துவதுடன், குறிப்பாக ஒத்துழைப்பை மேம்படுத்துவது, திறன் மேம்பாடு ஆகியவை குறித்தும் விவாதிக்கவுள்ளனர். சுகாதாரம், கல்வி, அறிவியல், தொழில்நுட்பம், எரிசக்தி, உள்கட்டமைப்பு, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு, நீலப் பொருளாதாரம் போன்ற வளர்ந்து வரும் துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்கான வாய்ப்புக்கள் குறித்தும் இரு தலைவர்களும் விவாதிக்கவுள்ளனர்.
மார்ச் 2025 - ல் பிரதமர் மோடி மொரீஷியஸ் நாட்டில் அரசு முறைப் பயணம் மேற்கொண்டதன் விளைவாக ஏற்பட்டுள்ள நேர்மறையான சூழல் அடிப்படையில் இந்த பேச்சுவார்த்தை உத்வேகம் பெற்றுள்ளது. அந்த பயணத்தின் மூலம் இரு தலைவர்களும் பரஸ்பரம் நல்லுறவை 'மேம்படுத்தப்பட்ட உத்திசார் கூட்டாண்மை'யாக மேம்படுத்தியுள்ளனர்.
இந்தியப் பெருங்கடல் பகுதியில் மதிப்புமிக்க நட்பு நாடாகவும், நெருங்கிய கடல்சார் அண்டை நாடாகவும் அமைந்துள்ள மொரீஷியஸ், இந்தியாவின் மஹாசாகர் (கடல்சார் பிராந்தியப் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சிக்கான பரஸ்பர மற்றும் முழுமையான முன்னேற்றம்) என்ற தொலைநோக்குப் பார்வையுடன், 'அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை' என்ற இந்தியாவின் கொள்கைக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இவ்விரு நாடுகளுக்கும் இடையேயான வலுவான ஒத்துழைப்பு, இரு நாட்டு மக்களின் வளமைக்கு மட்டுமின்றி, உலகளாவிய தெற்கு நாடுகளின் ஒட்டுமொத்த விருப்பங்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது.
வாரணாசியில் நடைபெறும் உச்சி மாநாடு, பரஸ்பரம் இரு நாடுகளுக்கும் வலம், நீடித்த வளர்ச்சி, பாதுகாப்பு மற்றும் உள்ளடக்கிய எதிர்காலத்தை நோக்கிய பயணத்தில் ஏற்பட்டுள்ள குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் குறிக்கும் வகையில் அமையும்.
***
(Release ID: 2165211)
AD/SV/AG/SH
(Release ID: 2165495)
Visitor Counter : 2
Read this release in:
Assamese
,
Bengali
,
Odia
,
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Manipuri
,
Bengali-TR
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Kannada
,
Malayalam