விவசாயத்துறை அமைச்சகம்
புதிய ஜிஎஸ்டி விகிதங்கள்: விவசாயம் மற்றும் விவசாயிகளின் முன்னேற்றத்துக்கு ஒரு வரப்பிரசாதம்
Posted On:
09 SEP 2025 2:13PM by PIB Chennai
புதிய ஜிஎஸ்டி வரி விகிதங்கள் விவசாயம் மற்றும் பால் பண்ணைத் துறைகளில் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். ஜிஎஸ்டி விகிதங்கள் குறைக்கப்பட்டதன் மூலம், நாடு முழுவதும் உள்ள விவசாயிகள், விவசாயம் மற்றும் பால் பண்ணைத் தொழிலாளர்கள் மற்றும் கால்நடை உரிமையாளர்கள் பிரதமர் திரு நரேந்திர மோடி மற்றும் மத்திய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமனுக்கு தங்களின் மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்து வருகின்றனர். மத்திய வேளாண் அமைச்சர் திரு சிவராஜ் சிங் சவுகான், இந்த புதிய விகிதங்களை ஒரு புரட்சிகரமான முடிவு என்று குறிப்பிட்டார்,
ஜிஎஸ்டி சீர்திருத்தங்களின் தாக்கம் சிறு மற்றும் நடுத்தர விவசாயிகளிடையே பரவலாகக் காணப்படும். விவசாய இயந்திரங்கள் மற்றும் சூரிய சக்தியில் இயங்கும் உபகரணங்களுக்கான ஜிஎஸ்டி குறைப்பு, விவசாயச் செலவுகளைக் குறைத்து விவசாயிகளின் லாபத்தை அதிகரிக்கும். உயிரி பூச்சிக்கொல்லிகள் மற்றும் நுண்ணூட்டச்சத்துக்கள் மீதான ஜிஎஸ்டி குறைக்கப்பட்டுள்ளது. இது விவசாயிகளுக்கு பயனளிக்கும். மேலும், இந்த நடவடிக்கை, ரசாயன உரங்களிலிருந்து உயிரி உரங்களுக்கு மாறுவதை ஊக்குவிக்கும். பால் துறையில், பால் மற்றும் சீஸ் ஆகியவற்றுக்கு இப்போது வரி இல்லை. இது சாதாரண மக்களுக்கு மட்டுமல்லாமல், விவசாயிகள், கால்நடை உரிமையாளர்கள் மற்றும் பால் உற்பத்தியாளர்களுக்கும் பயனளிக்கும். ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் ஒருங்கிணைந்த விவசாயத்தையும் ஊக்குவிக்கும். கால்நடை வளர்ப்பு, தேனீ வளர்ப்பு, மீன்வளம், வேளாண் காடுகள் மற்றும் கோழி வளர்ப்பில் நன்மைகள் மற்றும் பயன்கள் ஏற்படும். வணிகச் சரக்கு வாகனங்களுக்கான ஜிஎஸ்டி குறைப்பு விவசாய விளைபொருட்களின் போக்குவரத்து செலவைக் குறைக்கும்.
ஒட்டுமொத்தமாக, விவசாயத்தில் ஜிஎஸ்டி வரி குறைப்பு என்பது விவசாயிகளுக்கு உகந்த, கிராமப்புறத்திற்கு ஆதரவான மற்றும் நிலைத்தன்மைக்கு ஆதரவான சீர்திருத்தமாகும். விவசாயிகளுக்கான செலவுகளைக் குறைத்தல், கூட்டுறவு சங்கங்கள் மற்றும் எஃப்பிஓக்களை ஊக்குவித்தல், உணவுப் பாதுகாப்பை வலுப்படுத்துதல் ஆகியவை விவசாயம் மற்றும் அது தொடர்பான தொழில்களில் முன்னேற்றத்தை ஏற்படுத்தும். உரச் செலவுகள் குறைவதால் பண்ணை உற்பத்தித்திறன் அதிகரிக்கும். விவசாயத்தில் இயந்திரமயமாக்கல் அதிகரிக்கும். இவை அனைத்திற்கும் மேலாக, மீன் வளர்ப்பு, பால் பண்ணை மற்றும் இதில் ஈடுபட்டுள்ள கூட்டுறவு நிறுவனங்கள் அதிக லாபம் ஈட்டும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2164904
***
(Release ID:2164904 )
SS/PKV/KR
(Release ID: 2164938)
Visitor Counter : 2