பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஒருங்கிணைந்த கமாண்டர்கள் மாநாடு 2025-ஐ செப்டம்பர் 15 அன்று கொல்கத்தாவில் பிரதமர் தொடங்கிவைக்கிறார்

Posted On: 08 SEP 2025 3:50PM by PIB Chennai

ஒருங்கிணைந்த கமாண்டர்கள் மாநாடு 2025-ஐ செப்டம்பர் 15 அன்று மேற்கு வங்கம் மாநிலம் கொல்கத்தாவில் நடத்த ஆயுதப் படைகள் ஏற்பாடு செய்துள்ளன. இந்த  ஆண்டு மாநாட்டின் மையப்பொருள், “சீர்திருத்தங்களின் ஆண்டு – எதிர்காலத்திற்கான மாற்றம்” என்பதாக இருக்கும். இந்த மாநாட்டை பிரதமர் திரு நரேந்திர மோடி  தொடங்கிவைக்கிறார். 

இந்த மாநாட்டில் பாதுகாப்பு அமைச்சர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர், பாதுகாப்புத்துறை இணையமைச்சர், முப்படைகளின் தளபதி, பாதுகாப்புத்துறை செயலாளர், மற்ற அமைச்சகங்களின் செயலாளர்கள், முப்படைகள் மற்றும் ஒருங்கிணைந்த பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆகியோரும் கலந்து கொள்வார்கள்.

ஒருங்கிணைந்த கமாண்டர்கள் மாநாடு 2025, சீர்திருத்தங்கள், மாற்றம் மற்றும் செயல்பாட்டு தயாரிப்புகளில் கவனம் செலுத்தும். புவிசார் உத்தியில், சிக்கல்கள் அதிகரித்து வரும் நிலையில், ஆயுதப்படைகளை மேலும் வலுப்படுத்துவதற்கான கருத்துகள் இதில் பரிமாறிக் கொள்ளப்படும்.

ஒருங்கிணைந்த கமாண்டர்கள் மாநாடு என்பது ஆயுதப்படைகளின் உயர்நிலை சிந்தனை அமைப்பாகும். நாட்டின் முதன்மையான சிவில் மற்றும் ராணுவ தலைவர்களை ஒருங்கிணைத்து கருத்தியல் மற்றும் உத்திசார் நிலையில் இதில் கருத்துப் பரிமாற்றம் செய்யப்படுகிறது.

***

SS/SMB/KPG/KR

 


(Release ID: 2164793) Visitor Counter : 2