வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
சர்வதேச சவால்களை எதிர்கொள்ள இந்தியா ஒருங்கிணைந்துள்ளது:- மத்திய அமைச்சர் திரு பியூஷ் கோயல்
Posted On:
08 SEP 2025 1:59PM by PIB Chennai
சர்வதேச அளவில் எந்தவொரு பெரிய விவகாரமாக இருந்தாலும், அதை எதிர்கொள்ள இந்தியா ஒரு தேசமாக ஒருங்கிணைந்து நிற்கிறது என்று மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
புதுதில்லியில் இந்திய பொறியியல் ஏற்றுமதி மேம்பாட்டு குழுமத்தின் தேசிய விருதுகள் விழாவில் இன்று உரையாற்றிய அவர், எந்தவொரு இடர்பாட்டையும் எதிர்கொள்ளும் திறன் நாட்டிற்கு உள்ளதாக கூறினார். வர்த்தக நிறுவனங்கள் உள்நாட்டு தயாரிப்புகளில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் இது இந்தியாவின் வளர்ச்சிக்கு உதவும் என்றும் குறிப்பிட்டார். அத்துடன் நாட்டின் நிதி பாதுகாப்பை வலுப்படுத்தும் என்றும் அவர் தெரிவித்தார்.
எந்தவொரு நாடும் ஏற்றுமதி கட்டுப்பாடுகளை அல்லது முக்கிய தயாரிப்புகளில் கட்டுப்பாடுகளை விதிக்க முடியும் என்பதை அண்மையில் காண முடிந்ததாக எச்சரித்த அவர், இந்நடவடிக்கை வர்த்தகத்திற்கு தடை ஏற்படுத்தும் என்று குறிப்பிட்டார். எனவே தற்சார்பு இந்தியாவில் அதிக கவனம் செலுத்த வேண்டிய தேவை உள்ளதாக அவர் கூறினார். எனவே அனைவரும் இதை அவசியம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அவர் விவரித்தார்.
உள்நாட்டு தயாரிப்புகளுக்கு அழைப்பு விடுத்து புதுமை கண்டுபிடிப்புகளின் முக்கயத்துவம் குறித்து பிரதமர் திரு நரேந்திர மோடி ஆகஸ்ட் 15 அன்று வலியுறுத்தியதை திரு கோயல் நினைவு கூர்ந்தார். இந்தியாவின் 140 கோடி மக்கள், தொழில் மற்றும் வர்த்தகத் துறையினர் ஆகியோர் உள்நாட்டு தயாரிப்புகளில் கவனம் செலுத்த வேண்டும் என்று திரு கோயல் கேட்டுக்கொண்டார்.
***
SS/IR/LDN/KR
(Release ID: 2164763)
Visitor Counter : 2