பிரதமர் அலுவலகம்
அடுத்த தலைமுறை ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள், பால் உற்பத்தியாளர்களுக்கு அதிகாரமளித்து, ஊரகப் பொருளாதாரத்தை வலுப்படுத்துகின்றன: பிரதமர்
प्रविष्टि तिथि:
04 SEP 2025 8:43PM by PIB Chennai
ஊட்டச்சத்து பாதுகாப்பை உறுதி செய்வதிலும், உள்ளடக்கிய வளர்ச்சியை இயக்குவதிலும் பால் உற்பத்தியாளர்கள் மற்றும் ஊரகப் பொருளாதாரத்தின் முக்கிய பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் அவர்களுக்கான அரசின் உறுதிப்பாட்டை பிரதமர் திரு நரேந்திர மோடி மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
தேசிய கால்நடை இயக்கம் போன்ற முதன்மை முன்முயற்சிகள் மற்றும் கூட்டுறவுகள், நிலையான துறைசார் சீர்திருத்தங்களுக்கான மேம்பட்ட ஆதரவின் வாயிலாக, பால்வளத் துறையின் சூழலியலை நவீனப்படுத்தி, மேம்படுத்துவதற்காக அரசு தொடர்ந்து பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த வகையில் சமீபத்திய முன்முயற்சியான அடுத்த தலைமுறை ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள், கூடுதல் முக்கியத்துவம் பெறுகின்றன.
அமுல் கூட்டுறவு சங்கம், சமூக ஊடக எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவிற்கு பதிலளித்து பிரதமர் திரு மோடி தெரிவித்திருப்பதாவது:
“லட்சக்கணக்கான மக்களுக்கு ஊட்டச்சத்து பாதுகாப்பை உறுதி செய்வதிலும், இந்தியாவின் ஊரகப் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதிலும், நமது விவசாயிகளின் பங்களிப்பு அளப்பரியதாக இருந்து வருகிறது.
தேசிய கால்நடை இயக்கம் போன்ற முதன்மை முன்முயற்சிகள் மற்றும் கூட்டுறவுகளுக்கான தொடர்ச்சியான சீர்திருத்தங்கள் மற்றும் ஆதரவின் வாயிலாக, இந்தியாவின் பால்வளத் துறையில் மாற்றத்தை ஏற்படுத்துவதில் எங்கள் அரசு உறுதிபூண்டுள்ளது.
லட்சக்கணக்கான பால் உற்பத்தியாளர்களுக்கு அதிகாரம் அளித்து, மதிப்புக் கூட்டலை ஊக்குவித்து, பால் பொருட்கள் அணுகக்கூடிய விலையில் நாட்டு மக்கள் அனைவருக்கும் கிடைக்க வழிவகை செய்வதற்கான மற்றொரு முக்கிய முயற்சிதான் அடுத்த தலைமுறை ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள்.”
*****
(Release ID: 2163927)
AD/BR/SG
(रिलीज़ आईडी: 2164118)
आगंतुक पटल : 10
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Odia
,
English
,
Gujarati
,
Kannada
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Manipuri
,
Assamese
,
Bengali
,
Punjabi
,
Telugu
,
Malayalam