குடியரசுத் தலைவர் செயலகம்
குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு செப்டம்பர் 01 முதல் 03-ம் தேதி வரை கர்நாடகா, தமிழ்நாடு மாநிலங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்
Posted On:
31 AUG 2025 5:36PM by PIB Chennai
இந்தியக் குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு 2025 செப்டம்பர் 1-ம் தேதி தொடங்கி 3-ம் தேதி வரை கர்நாடகா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் பயணம் மேற்கொள்கிறார்.
2025 செப்டம்பர் 01-ம் தேதி, கர்நாடகாவின் மைசூருவில் உள்ள அகில இந்திய பேச்சு, செவித்திறன் நிறுவனத்தின் (AIISH-ஏஐஐஎஸ்ஹெச்) வைர விழா கொண்டாட்டங்களில் குடியரசுத்தலைவர் கலந்து கொள்கிறார்.
2025 செப்டம்பர் 02-ம் தேதி, தமிழ்நாட்டின் சென்னையில் நடைபெறும் சிட்டி யூனியன் வங்கியின் 120-வது நிறுவன தின விழாவில் குடியரசுத்தலைவர் கலந்து கொள்ளவுள்ளார்.
2025 செப்டம்பர் 03-ம் தேதி, தமிழ்நாட்டின் திருவாரூரில் உள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தின் 10-வது பட்டமளிப்பு விழாவில் குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு கலந்து கொள்கிறார்.
****
(Release ID: 2162469)
AD/PLM/SG
(Release ID: 2162486)
Visitor Counter : 2