பிரதமர் அலுவலகம்
கியூண்ட்ரில் தலைவர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி, திரு. மார்ட்டின் ஷ்ரோட்டர் பிரதமர் திரு. நரேந்திர மோடியை சந்தித்தார்.
இடுகை இடப்பட்ட நாள்:
21 AUG 2025 9:50PM by PIB Chennai
கியூண்ட்ரில் தலைவர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி திரு. மார்ட்டின் ஷ்ரோட்டர், பிரதமர் திரு நரேந்திர மோடியை புதுதில்லியில் சந்தித்தார். உலகளாவிய கூட்டாளர்களை அன்புடன் வரவேற்ற பிரதமர், இந்தியாவின் பரந்த வாய்ப்புகளை ஆராய்ந்து, இந்தியாவின் திறமையான இளைஞர்களுடன் இணைந்து புதுமைப்படுத்தி சிறந்து விளங்க அழைப்பு விடுத்தார்.
இத்தகைய இணைப்புகள் மூலம், இந்தியாவிற்கு மட்டும் பயனளிக்காமல், உலகளாவிய முன்னேற்றத்திற்கும் பங்களிக்கும் தீர்வுகளை உருவாக்க முடியும் என்று பிரதமர் மோடி வலியுறுத்தினார்.
திரு. மார்ட்டின் ஷ்ரோட்டரின் எக்ஸ் சமூக வலைதள பதிவுக்கு பதிலளித்து பிரதமர் கூறியிருப்பதாவது:
"திரு மார்ட்டின் ஷ்ரோட்டருடனான சந்திப்பு உண்மையிலேயே நிறைவான ஒன்றாக இருந்தது. நமது தேசத்தின் பரந்த வாய்ப்புகளை ஆராய்ந்து, நமது திறமையான இளைஞர்களுடன் இணைந்து புதுமைப்படுத்தி சிறந்து விளங்க இந்தியா உலகளாவிய கூட்டாளர்களை அன்புடன் வரவேற்கிறது.
நாம் அனைவரும் ஒன்றிணைந்து, இந்தியாவிற்கு மட்டும் பயனளிக்காமல், உலகளாவிய முன்னேற்றத்திற்கும் பங்களிக்கும் தீர்வுகளை உருவாக்க முடியும்."
***
(Release ID: 2159565)
AD/SS/EA/KR
(வெளியீட்டு அடையாள எண்: 2159756)
வருகையாளர் எண்ணிக்கை : 17
இந்த வெளியீட்டை படிக்க:
Telugu
,
Malayalam
,
English
,
Gujarati
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Assamese
,
Manipuri
,
Bengali
,
Punjabi
,
Odia
,
Kannada