ரெயில்வே அமைச்சகம்
தீபாவளி, சத் பண்டிகைகளுக்காக 12,000-க்கும் அதிகமான சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன: ரயில்வே அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ்
Posted On:
21 AUG 2025 2:09PM by PIB Chennai
தீபாவளி, சத் பண்டிகைகளின் போது பயணிகளின் வசதிக்காக 12,000-க்கும் அதிகமான சிறப்பு ரயில்களை இயக்குவதற்கு இந்திய ரயில்வே முடிவு செய்துள்ளது. இது குறித்து ரயில் பவனில் செய்தியாளர்களிடம் பேசிய ரயில்வே அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ், பீகார் துணை முதலமைச்சர் திரு சாம்ராட் சௌத்ரி, நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் சஞ்சய் ஜெய்ஸ்வால், மத்திய அமைச்சர் திரு லாலன் சிங், நாடாளுமன்ற உறுப்பினர் திரு சஞ்சய் குமார் ஜா ஆகியோருடனான ஆலோசனைக்குப் பிறகு எதிர்வரும் தீபாவளி, சாத் பண்டிகைகளுக்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்ய முடிவு செய்யப்பட்டதாக கூறினார்.
அக்டோபர் 13 - 26 இடையேயான நாட்களில் பயணம் செய்வோருக்கும், நவம்பர் 17 - டிசம்பர் 1 இடையேயான நாட்களில் திரும்புவோருக்கும் கட்டணங்களில் 20 சதவீதம் தள்ளுபடி அளிக்கப்படும் என்று அவர் அறிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2158988
***
AD/IR/AG/KR
(Release ID: 2159164)