பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

சீன வெளியுறவு அமைச்சர் திரு வாங் யி, பிரதமர் திரு நரேந்திர மோடியுடன் சந்திப்பு


இருதரப்பு உறவுகளுக்காக எல்லையில் அமைதியின் முக்கியத்துவத்தை பிரதமர் வலியுறுத்தினார்

கடந்த ஆண்டு கசானில் அதிபர் திரு ஜி உடனான சந்திப்பிற்கு பிறகு இருதரப்பு உறவுகளில் ஏற்பட்டுள்ள நிலையான மற்றும் நேர்மறையான முன்னேற்றத்தை பிரதமர் வரவேற்றார்

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சிமாநாட்டில் கலந்து கொள்ளுமாறு அதிபர் திரு ஜி விடுத்த அழைப்பை பிரதமர் ஏற்றுக்கொண்டார்

நிலையான, கணிக்கக்கூடிய மற்றும் ஆக்கபூர்வமான இருதரப்பு உறவுகள், பிராந்திய மற்றும் உலகளாவிய அமைதி மற்றும் செழிப்புக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கும் என்பதை பிரதமர் அடிக்கோடிட்டுக் காட்டினார்

Posted On: 19 AUG 2025 7:38PM by PIB Chennai

பிரதமர் திரு. நரேந்திர மோடி, சீன கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட்பீரோ உறுப்பினரும் சீன வெளியுறவு அமைச்சருமான திரு. வாங் யியை இன்று சந்தித்தார்.

 

தியாஞ்ஜினில் நடைபெறவுள்ள  ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சிமாநாட்டில் கலந்து கொள்ளுமாறு அதிபர் திரு ஜி விடுத்த செய்தியையும், அழைப்பையும் திரு. வாங் யி, பிரதமரிடம் வழங்கினார். தேசிய பாதுகாப்பு ஆலோசகர் திரு அஜித் தோவலுடன் இணைந்து தாம் தலைமை தாங்கிய 24-வது சிறப்பு பிரதிநிதிகள் கூட்டம்  மற்றும் வெளியுறவு அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கருடனான இருதரப்பு சந்திப்பு குறித்த தனது நேர்மறையான கருத்துக்களையும்   திரு. வாங் யி பகிர்ந்து கொண்டார்.

 

எல்லையில் அமைதியை நிலைநாட்டுவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்திய பிரதமர், எல்லைப் பிரச்சினைக்கு நேர்மையான, நியாயமான, பரஸ்பரம் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வில் இந்தியாவின் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினார்.

 

கடந்த ஆண்டு கசானில் அதிபர் திரு ஜி உடனான சந்திப்பிற்கு பிறகு  இருதரப்பு உறவுகளில் ஏற்பட்டுள்ள நிலையான மற்றும் நேர்மறையான முன்னேற்றத்தை பிரதமர் வரவேற்றார். கைலாஷ் மானசரோவர் யாத்திரை மீண்டும் தொடங்கப்பட்டது உட்பட பரஸ்பர மரியாதை, ஆர்வம் மற்றும் உணர்வுபூர்வமாக அதிபருடனான சந்திப்பு வழிநடத்தப்பட்டது.

 

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சிமாநாட்டிற்கான அழைப்பிற்காக, பிரதமர், திரு  ஜி-க்கு நன்றி தெரிவித்தார். உச்சிமாநாட்டிற்கு சீனா தலைமை தாங்குவதற்கு அவர் ஆதரவளித்ததுடன், தியான்ஜினில் அதிபரை சந்திக்க ஆவலுடன் இருப்பதாகவும் கூறினார். இந்தியாவிற்கும், சீனாவிற்கும் இடையிலான நிலையான, கணிக்கக்கூடிய மற்றும் ஆக்கபூர்வமான உறவுகள் பிராந்திய மற்றும் உலகளாவிய அமைதி மற்றும் செழிப்புக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கும் என்று பிரதமர் அடிக்கோடிட்டுக் காட்டினார்.

***

 

(Release ID: 2158112)

AD/RB/DL


(Release ID: 2158196)