நிதி அமைச்சகம்
பொருளாதார நெகிழ்தன்மை மற்றும் நிலையான நிதி ஒருங்கிணைப்பை எடுத்துக்காட்டி, நிலையான கண்ணோட்டத்துடன் இந்தியாவை பிபிபி நிலைக்கு எஸ் & பி உயர்த்தியது
Posted On:
14 AUG 2025 6:37PM by PIB Chennai
இந்தியாவின் நீண்டகால மதிப்புமிக்க கடன் மதிப்பீட்டை ‘பிபிபி-’ நிலையிலிருந்து ‘பிபிபி’ நிலைக்கும், குறுகிய கால மதிப்பீட்டை ‘ஏ-3’ என்ற நிலையிலிருந்து ‘ஏ-2’ நிலைக்கும் ஸ்டாண்டர்ட் & புவர்-இன் (எஸ் & பி) உலகளாவிய மதிப்பீடுகள் தரம் உயர்த்தியதை நிதி அமைச்சகம் வரவேற்றுள்ளது. இந்தியாவின் பொருளாதார முன்னேற்றம் மற்றும் குறிப்பிடத்தக்க நிதி மேலாண்மையின் முக்கியத்துவத்தை இந்தத் தரம் உயர்வு உணர்த்துகிறது. கடந்த 18 ஆண்டுகளில் எஸ் & பி நிறுவனம் இப்போதுதான் முதன்முறையாக நாட்டின் மதிப்புமிக்க கடன் மதிப்பீட்டை தரம் உயர்த்தி இருக்கிறது. இதற்கு முன்பு, கடந்த 2007-ம் ஆண்டில் ‘பிபிபி-’ முதலீட்டு தரத்திற்கு இந்தியா உயர்த்தப்பட்டது. கடந்த மே 2024-ல், இந்தியா குறித்த கண்ணோட்டத்தை, ‘நிலையானது’ என்ற நிலையிலிருந்து ‘நேர்மறையானதாக’ முகமை திருத்தி அமைத்தது.
இன்று வெளியிடப்பட்ட இந்தியாவுக்கான எஸ் & பி-ன் மதிப்புமிக்க கடன் மதிப்பீட்டு ஆய்வின்படி, இந்தியாவின் ஆற்றல் வாய்ந்த பொருளாதார வளர்ச்சி; நிதி ஒருங்கிணைப்பிற்கான அரசின் தொடர் உறுதிப்பாடு; பொது செலவினங்களின் மேம்பட்ட தரம்; வலிமையான பெரு நிறுவன, நிதி மற்றும் வெளிப்புற இருப்பு நிலைக் குறிப்புகள் உள்ளிட்ட முக்கிய காரணிகளின் கலவையை தரம் உயர்வு பிரதிபலிக்கிறது. நம்பகத்தன்மை வாய்ந்த பணவீக்க மேலாண்மை, மற்றும் அதிகரித்து வரும் கொள்கை சார்ந்த முன்கணிப்புகள் முதலியவையும் முக்கிய பங்கு வகிக்கின்றன.
ஆசிய- பசிபிக் பிராந்தியத்திலேயே மிக அதிகமாக, நிதியாண்டு 22 முதல் நிதியாண்டு 24 வரை ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியில் சராசரியாக 8.8 சதவீதத்துடன் உலகளாவிய முக்கிய பொருளாதரங்களில் மிக வேகமாக வளரும் நாடுகளில் ஒன்றாக இந்தியா திகழ வழிவகை செய்திருக்கும் இந்திய பொருளாதாரத்தின் முக்கிய ஆற்றல் சக்திகள் பற்றி இந்த அறிக்கை விரிவாகக் குறிப்பிட்டுள்ளது. நிதியாண்டு 26 இல் ஒட்டு மொத்த உள்நாட்டு உற்பத்தி 6.5 சதவீதமாக வளர்ச்சி அடையும் என்றும், அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு இந்த நிலை தக்கவைக்கப்படக்கூடும் என்றும் எஸ் & பி கணித்திருக்கிறது. இந்தியாவின் பெரிய மற்றும் நெகிழ்தன்மை கொண்ட உள்நாட்டு நுகர்வு காரணமாக, அமெரிக்காவின் சமீபத்திய வரிவிதிப்புகள் குறைவான தாக்கத்தையே ஏற்படுத்தக்கூடும் என்று அறிக்கை தெரிவித்துள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2156501
***
(Release ID: 2156501)
SS/RB/DL
(Release ID: 2156647)