கூட்டுறவு அமைச்சகம்
மாநில கூட்டுறவு தேர்தல் அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் புதுதில்லியில் நடைபெற்றது
Posted On:
11 AUG 2025 4:14PM by PIB Chennai
மாநில கூட்டுறவு தேர்தல் அதிகாரிகளுடனான முதலாவது ஆலோசனைக் கூட்டத்தை கூட்டுறவு தேர்தல் ஆணையம் புதுதில்லியில் இன்று நடத்தியது. கூட்டுறவு அமைப்புகளில் தேர்தல்கள் சுதந்திரமாகவும் நியாயமாகவும் நடத்தப்படுவதற்காக, மாநில கூட்டுறவு தேர்தல் பொறுப்பாளர்களுடன் உரையாடலை மேற்கொள்வதே இந்தக் கூட்டத்தின் நோக்கமாகும். கூட்டுறவு தேர்தல் ஆணைய தலைவர் திரு தேவேந்திர குமார் சிங் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் ஒடிசா, பீகார், தமிழ்நாடு, தெலங்கானா மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களைச் சேர்ந்த மாநில தேர்தல் ஆணையர்கள் கலந்துகொண்டனர். கூட்டுறவு அமைச்சக இணைச்செயலாளர் திரு ஆனந்த் குமார் ஜா பங்கேற்று பேசினார்.
இக்கூட்டத்தில் பேசிய கூட்டுறவு தேர்தல் ஆணையத்தின் தலைவர் திரு. தேவேந்திர குமார் சிங், பிரதமர் திரு. நரேந்திர மோடியின் தலைமையிலும், மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவு அமைச்சர் திரு. அமித் ஷாவின் வழிகாட்டுதலிலும், கூட்டுறவுத் துறையில் பல்வேறு சீர்திருத்தங்களை அரசு மேற்கொண்டுள்ளது என்றும், கூட்டுறவுத் தேர்தல் ஆணையத்தை நிறுவுதல் உட்பட பல்வேறு சீர்திருத்தங்களை அரசு கொண்டு வந்துள்ளது என்றும் கூறினார். கூட்டுறவுத் தேர்தல் ஆணையம் 2024 மார்ச் முதல் இதுவரை 159 தேர்தல்களை நடத்தியுள்ளது. மேலும் இதுபோன்ற 69 கூட்டுறவுத் தேர்தல்களை நடத்தும் பணியில் ஈடுபட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
2025-ம் ஆண்டு சர்வதேச கூட்டுறவு ஆண்டாக கொண்டாடப்படுகிறது. கூட்டுறவுத் துறையின் வளர்ச்சிக்கு அரசு தனது அர்ப்பணிப்பை வெளிப்படுத்தும் வகையில் ஏராளமான சீர்திருத்தங்களை அரசு கொண்டு வந்துள்ளது. கூட்டுறவு சங்கங்களில் தேர்தல்களை சுதந்திரமாகவும், நியாயமாகவும் நடத்துவதற்கு வெளிப்படைத்தன்மையை ஏற்படுத்துவதற்கு கூட்டுறவு சங்கங்களில் தேர்தல் நடைமுறையை நெறிப்படுத்த வேண்டும் என்று அவர் கூறினார். தமிழ்நாடு மாநில கூட்டுறவு சங்க தேர்தல் ஆணையர் திரு தயானந்த் கட்டாரியா இக்கூட்டத்தில் கலந்துகொண்டார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2155046
***
AD/IR/AG/DL
(Release ID: 2155234)
Read this release in:
Odia
,
Assamese
,
English
,
Urdu
,
Urdu
,
Hindi
,
Marathi
,
Punjabi
,
Telugu
,
Kannada
,
Malayalam