பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

புதுதில்லியில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக புதிதாக கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்பை திறந்து வைத்து பேசிய பிரதமர் உரையின் தமிழாக்கம்

Posted On: 11 AUG 2025 11:44AM by PIB Chennai

திரு ஓம் பிர்லா அவர்களே, திரு மனோகர்லால் அவர்களே, கிரண் ரிஜிஜூ அவர்களே, திரு மகேஷ் ஷர்மா அவர்களே, அனைத்து மதிப்புமிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களே, மக்களவை தலைமைச் செயலர் அவர்களே, பெரியோர்களே, தாய்மார்களே!

சில நாட்களுக்கு முன்பு கடமைப்பாதையில் கட்டப்பட்டுள்ள பொது மத்திய செயலகமான கடமை மாளிகையை நான் தொடங்கி வைத்தேன். இன்று, எனது சக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக கட்டப்பட்டுள்ள புதிய குடியிருப்பு வளாகத்தை திறந்து வைக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது. ­­­­இந்த நான்கு அடுக்குமாடி கட்டடங்களுக்கும், லட்சக்கணக்கான மக்களுக்கு வாழ்வாதாரத்தை அளித்துள்ள கிருஷ்ணா, கோதாவரி, கோஷி மற்றும் ஹூக்ளி என்ற சிறப்பான நான்கு இந்திய நதிகளின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.  தற்போது, அந்த பெயர்களால் வெகுவாக ஈர்க்கப்பட்டு நமது நாடாளுமன்ற உறுப்பினர்களின் வாழ்வில் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் வகையில் இந்த குடியிருப்பு உள்ளது. இது தொடர்பாக ஒரு சிலர் தங்களது சொந்த கருத்துகளை கொண்டிருப்பார்கள். உதாரணமாக கோஷி நதியின் பெயரை அறிந்திராத மற்றும் அதனை கண்டிராத சிலர், பீகார் மாநில தேர்தல் குறித்து தங்களது கருத்துகளை தெரிவிப்பர். இத்தகைய குறுகிய சிந்தனை கொண்ட சிலருக்கு பாரம்பரிய வழக்கமாக நதிகளின் பெயர்களை சூட்டுவதன் வாயிலாக தேசிய ஒருமைப்பாட்டுடன் அவர்களை நம்முடன் பிணைக்கும் என்று என்னால் உறுதியாக கூற முடியும். இது தில்லியில் உள்ள நமது நாடாளுமன்ற உறுப்பினர்களின் குடியிருப்பு வசதிகளை மேம்படுத்துவதுடன், உறுப்பினர்களுக்கான அரசு குடியிருப்புகளின் எண்ணிக்கையையும் அதிகரிக்க உதவிடும். நான் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன். இந்த குடியிருப்பின் கட்டுமானப் பணியில் ஈடுபட்டுள்ள பொறியியலாளர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு அவர்களது அர்ப்பணிப்புமிக்க கடின உழைப்புக்காக நான் பாராட்டு தெரிவித்துக் கொள்கிறேன்.

நண்பர்களே,

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக புதிதாக கட்டப்பட்டுள்ள குடியிருப்பு வளாகத்தில் உள்ள மாதிரி வீட்டிற்குச் சென்று பார்வையிடும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. மேலும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களின் குடியிருப்புகளின் நிலை குறித்தும் அறிந்துகொள்ளும் வாய்ப்பு தற்போது எனக்கு கிடைத்தது. இந்த பழைய குடியிருப்புகள் பாழடைந்தும், பராமரிக்கப்படாமலும் இருந்ததுடன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடிக்கடி பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டும் வந்தனர். பழைய குடியிருப்பிலிருந்து புதிய குடியிருப்பிற்கு மாறியவுடன் அவர்கள் பிரச்சனைகளிலிருந்து முழுவதும் விடுபடுவர். அவர்களது தனிப்பட்ட சிரமங்களில் இருந்து விடுபடும் போது அவர்களால் குடிமக்களின் பிரச்சனைகளுக்கு திறம்பட தீர்வு காண்பதற்கான சக்தியையும், கூடுதல் நேரத்தையும் செலவிடும் வாய்ப்பு ஏற்படும்.

நண்பர்களே,

முதன்முறையாக தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தில்லியில் வீடுகள் கிடைப்பதில் உள்ள சிரமங்களை அவர்கள் எதிர்கொண்டு வருவது நீங்கள் அனைவரும் அறிந்ததே. இந்த அடுக்குமாடி குடியிருப்புகளில் 180-க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றாக வசிக்க முடியும். இதனுடன் புதிய குடியிருப்புவாசிகளுக்கு பொருளாதார அம்சங்களிலும் குறிப்பிடத்தக்க வகையில பயனுள்ளதாக அமையும். அண்மையில் கடமை மாளிகை திறந்து வைத்த போது, பல்வேறு அமைச்சகங்கள் வாடகை கட்டடங்களில் இயங்கி வந்ததை நான் சுட்டிக்காட்டினேன். இந்த கட்டடங்களுக்கு ஆண்டுதோறும் 1500 கோடி ரூபாய் வாடகையாக செலுத்தப்பட்டு வந்ததையும் நான் சுட்டிக்காட்டியிருந்தேன். இது மக்களின் பணம் நேரடியாக வீணடிக்கப்படுவதாகும். இதேபோல், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு போதிய வீட்டுவசதி இல்லாத சூழல் அரசின் செலவினங்களை அதிகரிக்கச் செய்யும். இதன் காரணமாக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான குடியிருப்புகளுக்கு பற்றாக்குறை இருந்து வந்த சூழலில் கடந்த 2004-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரை மக்களவை உறுப்பினர்களுக்காக ஒரு புதிய வீடு கூட கட்டப்படாத நிலை இருந்தது.  இதன் காரணமாக மத்திய அரசு இந்தப் பணியை ஒரு இயக்கமாக கருதி 2014-ம் ஆண்டிற்குப் பிறகு இன்று வரை இந்தப் புதிய அடுக்குமாடி குடியிருப்பு உட்பட 350 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான குடியிருப்புகளை கட்டியுள்ளது. இந்த குடியிருப்பு வளாகத் திட்டம் நிறைவடைந்துள்ளதன் மூலம் மக்களின் பணம் சேமிக்கப்பட்டுள்ளது.

நண்பர்களே,

21-ம் நூற்றாண்டில் இந்தியா வளர்ச்சிக்கான நடவடிக்கைகளில் முழு ஈடுபாட்டுடனும், பொறுப்புணர்வுடனும் செயல்பட்டு வருகிறது. இன்று நாடு கடமைப் பாதை மற்றும் கடமை மாளிகையை கட்டியுள்ளது. மேலும், லட்சக்கணக்கான மக்களுக்கு குழாய் மூலம் குடிநீர் வழங்கும் கடமையும் நிறைவேற்றப்பட்டுள்ளது. இன்று   நாடாளுமன்ற உறுப்பினர்கள் புதிய வீட்டிற்காக காத்திருந்த நிலையும், முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. மேலும் பிரதமரின் வீட்டு வசதித் திட்டத்தின் கீழ், நான்கு கோடி ஏழை குடும்பங்களுக்கு வீடுகள் வழங்கப்பட்டுள்ளது. இன்று நாட்டிற்காக புதிய நாடாளுமன்றக் கட்டடமும், நூற்றுக்கணக்கான மருத்துவக் கல்லூரிகளும் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் சமூகத்தில் உள்ள ஒவ்வொரு பிரிவினரும் பயனடையும் வகையிலான அரசின் முயற்சியாகும்.

நண்கர்களே,

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக புதிதாக கட்டப்பட்டுள்ள குடியிருப்புகள் அமைப்பதில் நீடித்த வளர்ச்சிக்கான சிறப்பு கவனம் செலுத்தப்பட்டுள்ளதற்காக நான் மகிழ்ச்சியடைகிறேன். நாட்டின் சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையிலும், எதிர்கால பாதுகாப்பு அம்சங்களைக் கருத்தில் கொண்டும், இந்த புதிய குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன. சூரிய மின் உற்பத்தியில் புதிய சாதனைகள் படைக்கும் வகையில் சூரிய சக்திக்கான உள்கட்டமைப்புகளை ஏற்படுத்தப்பட்டு வருகிறது. நீடித்த வளர்ச்சிக்கான தொலைநோக்குப் பார்வையுடன் இந்தியா தொடர்ந்து முன்னேற்றம் கண்டு வருகிறது.

நண்பர்களே,

இன்று, உங்களிடம் ஒரு கோரிக்கையை நான் முன் வைக்கிறேன். இங்கே நாட்டின் பல்வேறு மாநிலங்கள் மற்றும் பகுதிகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றாக வசிக்க உள்ளனர். நீங்கள் அனைவரும் ஒன்றிணைந்திருப்பது ஒரே பாரதம், உன்னத பாரதம் என்ற உணர்வுக்கு அடையாளமாகத் திகழ்கிறது. எனவே, ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள கொண்டாட்டங்கள் மற்றும் விழாக்கள் அதற்குரிய காலங்களில் ஒருங்கிணைந்து ஏற்பாடு செய்வதன் மூலம் இந்த குடியிருப்பு வளாகத்தின் உற்சாகத்தை பெருமளவிற்கு மேம்படுத்த முடியும். இது போன்ற நிகழ்ச்சிகளில் உங்கள் நாடாளுமன்ற தொகுதிகளில் உள்ள மக்களை பங்கேற்க செய்யும் வகையில் அவர்களுக்கு நீங்கள் அழைப்பு விடுக்க வேண்டும். நீங்கள் ஒருவருக்கொருவர் தங்களது மொழிகளை பிறருக்கு போதிப்பதன் மூலம் அந்தந்த பிராந்திய மொழிகளில் உள்ள ஒரு சில வார்த்தைகளை கற்றுக் கொள்ள முடியும். நிலைத்தன்மை, தூய்மை ஆகியவை இந்த குடியிருப்பு வளாகத்தின் அடையாளமாக இருப்பதுடன் நமது பகிரப்பட்ட உறுதிமொழியாகவும் இருக்க வேண்டும். இது நாடாளுமன்ற உறுப்பினர்களின் குடியிருப்பு வளாகமாக இருப்பதுடன், இந்த ஒட்டுமொத்த வளாகமும் தூய்மை மற்றும் சுகாதாரத்துடன் பராமரிக்கப்பட வேண்டியது அவசியம்.

நண்பர்களே,

நாம் அனைவரும் ஒரே குழுவாக ஒன்றிணைந்து பணியாற்றுவோம் என்ற நம்பிக்கை கொண்டுள்ளேன். நமது முயற்சிகள் அனைத்தும் நாட்டின் வளர்ச்சிக்கான முன் மாதிரியாக இருக்க வேண்டும். நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான பல்வேறு குடியிருப்பு வளாகங்களுக்கு இடையே தூய்மைப் பராமரிப்புக்கான போட்டிகளை அமைச்சகங்கள் மற்றும் வீட்டு வசதி குழுக்கள் ஆண்டிற்கு இரண்டு முதல் மூன்று முறை ஏற்பாடு செய்ய வேண்டும். இதன் மூலம் இந்த குடியிருப்பில் உள்ள தொகுதி மிகச்சிறந்த தூய்மைப் பராமரிப்பை மேற்கொண்டுள்ளது என்பதை கண்டறிந்து அறிவிக்கப்பட வேண்டும். ஒரு ஆண்டிற்குப் பிறகு சிறப்பான பராமரிப்பு மேற்கொண்டுள்ள அடுக்குமாடி கட்டடம் என்ற இரண்டு முடிவுகளையும் நாம் கட்டாயம் அறிவிக்கப்பட வேண்டும்.

நண்பர்களே,

நான் இந்த புதிய அடுக்குமாடி குடியிருப்புகளை காண்பதற்காக சென்ற போது, நான் அந்த வளாகத்தில் நுழைந்தவுடன் எனது முதலாவது கருத்தாக இது அனைவருக்குமானதா? என்பதாகும். இந்த வினாவிற்கு அதிகாரிகள் இது ஒரு தொடக்கமாகும் என்று கூறி, குடியிருப்பின் உட்பகுதிக்குள் வருமாறு அழைத்தனர். நான் பெரிதும் வியப்படைந்தேன். இந்த குடியிருப்பில் உள்ள அனைத்து வீடுகளின் அறைகளும், இட வசதியுடன் அமைக்கப்பட்டிருக்கும் என்பதை நான் நினைத்துக் கூட பார்க்கவில்லை. இந்த குடியிருப்புகள் சிறந்த முறையில் பயன்படுத்தப்படும் என்று நான் நம்பிக்கை கொண்டுள்ளேன். மேலும் இந்த புதிய குடியிருப்பு வளாகம், உங்களது தனிப்பட்ட மற்றும் குடும்பத்தினரின் வாழ்வில் நல்லாசிகளை வழங்கும். உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துகள்.

***

(Release ID: 2154963)

AD/SV/RJ/SG/DL


(Release ID: 2155224)