பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

உலக சமஸ்கிருத தினத்தை முன்னிட்டு பிரதமர் வாழ்த்து

சமஸ்கிருதப் பாரம்பரியத்தைப் பாதுகாத்து, ஊக்குவிப்பதற்கான உறுதிப்பாட்டை பிரதமர் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்

Posted On: 09 AUG 2025 10:13AM by PIB Chennai

ஷ்ரவண பூர்ணிமா (ஆடி மாத பௌர்ணமி) தினத்தில் இன்று, உலக சமஸ்கிருத தினம் கொண்டாடப்படுவதை முன்னிட்டு, பிரதமர் திரு நரேந்திர மோடி நாட்டு மக்களுக்குத் தமது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டுள்ளார். சமஸ்கிருதம் அறிவு மற்றும் ஆற்றலின் வெளிப்பாடாக காலத்தால் அழியாத ஆதாரமாக திகழ்கிறது என்று கூறியுள்ள பிரதமர், பல்வேறு துறைகளில் அதன் நீடித்த தாக்கத்தைச் சுட்டிக் காட்டியுள்ளார்.

உலகெங்கிலும் சமஸ்கிருதத்தைக் கற்றுக்கொண்டு, பிறருக்குக் கற்பித்து, பிரபலப்படுத்துவதில் தொடர்ந்து ஈடுபட்டுள்ள அறிஞர்கள், மாணவர்கள், ஆர்வலர்கள் ஆகியோரின் அர்ப்பணிப்பைத் திரு நரேந்திர மோடி பாராட்டியுள்ளார். கடந்த பத்து ஆண்டுகளில், மத்திய சமஸ்கிருத பல்கலைக்கழகங்களை நிறுவுதல், சமஸ்கிருத கற்றல் மையங்களைத் திறப்பது, சமஸ்கிருத அறிஞர்களுக்கு மானியங்கள் வழங்குதல், சமஸ்கிருத கையெழுத்துப் பிரதிகளை டிஜிட்டல் மயமாக்குவதற்கான ஞான பாரதம் இயக்கத்தைத் தொடங்குதல் போன்ற பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு, சமஸ்கிருத மொழிக் கல்வியையும் ஆராய்ச்சியையும் வலுப்படுத்த அரசு தொடர்ச்சியான நடவடிக்கைகளை எடுத்துள்ளது என்பதை அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள தொடர் பதிவுகளில் கூறியிருப்பதாவது:

"இன்று, ஷ்ரவண பூர்ணிமா (ஆடி பௌர்ணமி) நாளில், உலக சமஸ்கிருத தினத்தை நாம் கொண்டாடுகிறோம். சமஸ்கிருதம் அறிவு மற்றும் ஆற்றலின் வெளிப்பாட்டில் காலத்தால் அழியாத ஆதாரமாகும். அதன் தாக்கத்தை பல்வேறு துறைகளில் காணலாம். சமஸ்கிருதத்தைக் கற்று பிரபலப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ள, உலகெங்கிலும் உள்ள ஒவ்வொரு நபரின் முயற்சியையும் பாராட்ட இந்த நாள் ஒரு சந்தர்ப்பமாகும்."

"கடந்த பத்து ஆண்டுகளில், நமது அரசு சமஸ்கிருதத்தைப் பிரபலப்படுத்த பல முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. மத்திய சமஸ்கிருத பல்கலைக்கழகங்கள், சமஸ்கிருத கற்றல் மையங்கள், சமஸ்கிருத அறிஞர்களுக்கு மானியங்கள் வழங்குதல், சமஸ்கிருத கையெழுத்துப் பிரதிகளை டிஜிட்டல் மயமாக்குவதற்கான ஞான பாரதம் இயக்கம் ஆகியவை இதில் அடங்கும். இது எண்ணற்ற மாணவர்களுக்கும் ஆராய்ச்சியாளர்களுக்கும் பயனளித்துள்ளது."

*****

(Release ID: 2154544)

AD/SM/PLM/SG

 


(Release ID: 2154593)