பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

பிரேசில் அதிபரிடமிருந்து, பிரதமர் திரு நரேந்திர மோடிக்கு தொலைபேசி அழைப்பு

கடந்த மாதம் பிரேசில் சென்றதை பிரதமர் நினைவு கூர்ந்தார்

வர்த்தகம், தொழில்நுட்பம், எரிசக்தி, பாதுகாப்பு, விவசாயம், சுகாதாரம் மற்றும் மக்கள் தொடர்பு போன்ற துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது என இரு தலைவர்களும் ஒப்புதல்

பரஸ்பரம் நலன் சார்ந்த பிராந்திய மற்றும் சர்வதேச விவகாரங்களில் தங்களது கருத்துக்களைப் பரிமாறிக்கொண்டனர்

प्रविष्टि तिथि: 07 AUG 2025 9:34PM by PIB Chennai

பிரேசில் அதிபர் திரு லூயிஸ் இனாசியோ லூலா டா சில்வா தொலைபேசி மூலம் பிரதமர் திரு நரேந்திர மோடியிடம் பேசினார்.

இந்தத் தொலைபேசி வழி உரையாடலின் போது பிரதமர் கடந்த மாதம் பிரேசிலுக்கு பயணம் மேற்கொண்ட போது வர்த்தகம், தொழில்நுட்பம், எரிசக்தி, பாதுகாப்பு, விவசாயம், சுகாதாரம் மற்றும் மக்கள் தொடர்பு போன்ற துறைகளில் இருநாடுகளுக்கும் இடையே ஒத்துழைப்பை வலுப்படுத்துவது என ஒப்புக் கொண்டதை நினைவு கூர்ந்தார்.

இந்தியா – பிரேசில் இடையே உத்திசார் ஒத்துழைப்பை புதிய உச்சத்திற்கு கொண்டு செல்வது என இரு தலைவர்களும் முடிவு செய்துள்ளனர்.

பரஸ்பரம் நலன் சார்ந்த பிராந்திய மற்றும் சர்வதேச விவகாரங்களில் இரு தலைவர்களும் தங்களது கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்.

குறிப்பிட்ட இடைவெளியில் இரு தலைவர்களும் கலந்தாலோசிப்பது என முடிவு செய்தனர்.

***

(Release ID: 2153944)

VL/SV/KPG/SG

 


(रिलीज़ आईडी: 2154065) आगंतुक पटल : 21
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Assamese , Manipuri , Bengali , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam