தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
இந்தியாவிற்கும் ஆயுதப்படைகளுக்கும் எதிரான பாகிஸ்தானின் பொய் பிரச்சாரத்தை அதிகாரப்பூர்வ உண்மை சரிபார்ப்பு பிரிவு மூலம் மத்திய அரசு ஏதிர்கொண்டு தடுக்கிறது
Posted On:
30 JUL 2025 4:46PM by PIB Chennai
சிந்தூர் நடவடிக்கையின் போது போலிச் செய்திகளைக் கண்டறிந்து நிறுத்தவும், திருத்தப்பட்ட வீடியோக்களை தடுக்கவும், பாகிஸ்தானின் இந்திய எதிர்ப்பு பிரச்சாரத்தை விரைவாக எதிர்க்கவும் பத்திர்கை தகவல் அலுவலக உண்மை சரிபார்ப்புப் பிரிவு 24 மணி நேரமும் பணியாற்றியது
சிந்தூர் நடவடிக்கையின் போது இந்தியாவிற்கு எதிரான பிரச்சாரத்தைப் பரப்பும் 1,400 க்கும் மேற்பட்ட வலைதள முகவரிகளை அரசு தடுத்தது
கிடைக்கக்கூடிய சட்டப்பூர்வ மற்றும் நிறுவன வழிமுறைகள் மூலம் போலி மற்றும் தவறான தகவல் பரவுவதைக் கட்டுப்படுத்த மத்திய அரசு அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளையும் எடுக்கிறது. சிந்தூர் நடவடிக்கையின் போது, பரப்பப்பட்ட போலிச் செய்திகள், தவறான தகவல் மற்றும் பொய் பிரச்சாரங்கள் பெரும்பாலும் இந்தியாவிற்கு வெளியே இருந்து நடத்தப்படுவது கண்டறியப்பட்டது. இத்தகைய தவறான பிரச்சாரங்களை எதிர்கொள்ள அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்தது:
உண்மையான தகவல்களை வழங்குதல்: மத்திய அரசு அவ்வப்போது ஊடக சந்திப்புகளை நடத்தி ஊடகங்களுக்கும் குடிமக்களுக்கும் சரியான தகவல்களை அளித்தது. பாதுகாப்புப் படைகளால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் விவரங்கள் தொடர்புடைய காணொலி காட்சிகள் மற்றும் செயற்கைக்கோள் படங்களுடன் விளக்கப்பட்டன. இந்த விளக்கங்கள் உண்மையான தகவல்களை வழங்கின.
அமைச்சகங்களுக்கு இடையேயான ஒருங்கிணைப்பு: ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது, அமைச்சகங்களின் பல்வேறு துறைகளுக்கு இடையேயான ஒருங்கிணைப்புக்காக ஒரு மையக் கட்டுப்பாட்டு அறை நிறுவப்பட்டது. இந்தக் கட்டுப்பாட்டு அறை அனைத்து நாட்களிலும் 24 மணி நேரமும் செயல்பட்டது. இது அனைத்து ஊடக நிறுவனங்களுக்கும் நிகழ்நேர தகவல் பரவலை எளிதாக்கியது. இந்தக் கட்டுப்பாட்டு அறையில் இந்திய ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படையின் செயல்பாட்டு பிரதிநிதிகள், பல்வேறு அரசு ஊடகப் பிரிவுகளின் அதிகாரிகள் மற்றும் பத்திரிகை தகவல் அலுவலகத்தின் (PIB) அதிகாரிகள் இருந்தனர். போலி செய்திகள் மற்றும் தவறான தகவல்களைப் பரப்பும் சமூக ஊடக தகவல்கள் மற்றும் பதிவுகள் தீவிரமாக அடையாளம் காணப்பட்டன.
உண்மை சரிபார்ப்பு
இந்தியா மற்றும் இந்திய ஆயுதப்படைகளுக்கு எதிரான பாகிஸ்தானிய பிரச்சாரத்தை இந்தப் பிரிவு எதிர்கொண்டு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டது மற்றும் அத்தகைய உள்ளடக்கத்தை எதிர்க்கும் பல பதிவுகளின் உண்மைத் தன்மையை சரிபார்த்தது. கூடுதலாக, உண்மை கண்டறியும் பிரிவால் சரிபார்க்கப்பட்ட ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான தவறான தகவல் அல்லது தவறான செய்திகளுடன் தொடர்புடைய இணைப்புகள், பொருத்தமான நடவடிக்கைக்காக உடனடியாக சம்பந்தப்பட்ட இணையதள செயலி நிறுவனங்களுடன் பகிரப்பட்டன.
உண்மை சரிபார்ப்பு பிரிவின் முயற்சிகள் ஊடகங்களால் பாராட்டப்பட்டன. அப்படிப்பட்ட சில கட்டுரைகளின் இணைப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
* 'ஆபரேஷன் சிந்தூர்'-ஐத் தொடர்ந்து இந்தியாவின் உண்மை கண்டறியும் பிரிவு பாகிஸ்தானின் டிஜிட்டல் பிரச்சாரத்தை விரைவாக எதிர்த்துப் போராடுகிறது
https://www.newindianexpress.com/nation/2025/May/10/indias-fcu-battles-pakistans-digital-propaganda-with-swift-rebuttals-following-operation-sindoor
* தவறான தகவல்களை வெளிச்சம் போட்டுக் காட்ட ஆபரேஷன் சிந்தூரைத் தொடர்ந்து அரசு உண்மை சரிபார்ப்புப் பிரிவு நடவடிக்கையில் இறங்குகிறது
https://www.livemint.com/industry/media/india-pib-govt-fact-checking-unit-operation-sindoor-misinformation-false-claims-11746770729519.html
* பாகிஸ்தானின் தவறான தகவல் பிரச்சாரத்தை இந்தியா எவ்வாறு எதிர்த்துப் போராடுகிறது
https://www.hindustantimes.com/india-news/how-india-is-fighting-pakistan-s-disinformation-campaign-101746644575505.html
தடுத்தல்
இந்தியாவிற்கு வெளியே இருந்து செயல்படும் பல சமூக ஊடகங்களைக் கையாளும் அமைப்புகள், தவறான மற்றும் தீங்கு விளைவிக்கும் தகவல்களைத் தீவிரமாகப் பரப்புவது கண்டறியப்பட்டது. தகவல் தொழில்நுட்பச் சட்டம் 2000 இன் பிரிவு 69A இன் கீழ், இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாடு, இந்தியாவின் பாதுகாப்பு, மாநில பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்கு ஆகியவற்றின் நலன்களுக்காக, வலைத்தளங்கள், சமூக ஊடக பக்கங்கள் மற்றும் இடுகைகளைத் தடுக்க அரசாங்கம் தேவையான உத்தரவுகளைப் பிறப்பித்தது.
ஆபரேஷன் சிந்தூர் செயல்பாட்டின் போது டிஜிட்டல் மீடியாவில் 1,400 க்கும் மேற்பட்ட வலைதள முகவரிகளைத் தடுப்பதற்கான உத்தரவுகளையும் அமைச்சகம் பிறப்பித்தது. பாகிஸ்தானை தளமாகக் கொண்டு செயல்படும் சமூக ஊடகக் கணக்குகளிலிருந்து உண்மை இல்லாத, தவறாக வழிநடத்தும், இந்தியாவுக்கு எதிரான தகவல்கள், வகுப்புவாத உணர்வுகளைத் தூண்டும் உள்ளடக்கம் மற்றும் இந்திய ஆயுதப் படைகளுக்கு எதிரான உள்ளடக்கம் ஆகியவை அடங்கும்.
ஊடகங்களுக்கான அறிவுரை
தேசிய பாதுகாப்பின் நலனுக்காக, பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் பாதுகாப்புப் படைகளின் நடமாட்டத்தை நேரடியாக ஒளிபரப்புவதைத் தவிர்க்குமாறு அனைத்து ஊடக அலைவரிசைகளுக்கும் தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் ஏப்ரல் 26, 2025 அன்று ஒரு அறிவுறுத்தலை வெளியிட்டது.
இந்தத் தகவலை மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ் இன்று மக்களவையில் சமர்ப்பித்தார்.
----
(Release ID: 2150213)
AD/SM/DL
(Release ID: 2150475)
Read this release in:
English
,
Urdu
,
Hindi
,
Marathi
,
Bengali-TR
,
Assamese
,
Bengali
,
Punjabi
,
Telugu
,
Kannada
,
Malayalam