பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

திறனுடன் இணைக்கப்பட்ட, அனைவரையும் உள்ளடக்கிய கல்விக்கான மாற்றுத் திட்டம் பிஆர்எஸ் (தேசிய மதிப்பீட்டு ஆய்வு) 2024 குறித்த கட்டுரையைப் பிரதமர் பகிர்ந்துள்ளார்

Posted On: 30 JUL 2025 1:32PM by PIB Chennai

இந்தியா தனது கல்வி முறையை மாணவர் சேர்க்கைக்கு அப்பால் என மறுவரையறை செய்து உண்மையான கற்றலில் கவனம் செலுத்தி வருவதாக பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று தெரிவித்துள்ளார். கட்டுரை ஒன்றைப் பகிர்ந்துள்ள திரு மோடி,  மாணவர் முன்னேற்றம் குறித்து அறிவியல் பார்வையை வழங்குகின்ற,  அனைவரையும் உள்ளடக்கிய, திறனுடன் இணைக்கப்பட்ட கல்விச்சூழல் அமைப்பை உருவாக்குவதற்கு  சான்றாதார அடிப்படையில், மாவட்ட அளவிலான நடவடிக்கைக்குரிய திட்டத்தை வழங்கும் பிஆர்எஸ் (தேசிய மதிப்பீட்டு ஆய்வு) 2024- ஐ பாராட்டியுள்ளார்.

மத்திய அமைச்சர் திரு ஜெயந்த் சவுத்ரியின் எக்ஸ் தளப் பதிவுக்குப் பதிலளித்து  பிரதமர் அலுவலக எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது:

"இந்தியா தனது கல்வி முறையை மாணவர் சேர்க்கைக்கு அப்பால் என மறுவரையறை செய்து உண்மையான கற்றலில் கவனம் செலுத்தி வருகிறது. மத்திய அமைச்சர் திரு ஜெயந்த் சவுத்ரி @jayantrld, தமது சமீபத்திய கட்டுரையில், பிஆர்எஸ் (தேசிய மதிப்பீட்டு ஆய்வு) 2024 மாணவர் முன்னேற்றம் குறித்த அறிவியல் பார்வையை எவ்வாறு வழங்குகிறது என்பதையும், அனைவரையும் உள்ளடக்கிய, திறனுடன் இணைக்கப்பட்ட கல்விச்சூழல் அமைப்பை உருவாக்குவதற்கு  சான்றாதார அடிப்படையில், மாவட்ட அளவிலான நடவடிக்கைக்குரிய திட்டத்தை எவ்வாறு வழங்குகிறது என்பதையும் விவாதித்துள்ளார்."

****

 (Release ID: 2150064)

AD/SMB/KR

 


(Release ID: 2150151)