பிரதமர் அலுவலகம்
இந்திய மற்றும் இங்கிலாந்து வணிகத் தலைவர்களுடன் இங்கிலாந்து பிரதமர் மற்றும் பிரதமர் திரு மோடி சந்திப்பு
प्रविष्टि तिथि:
24 JUL 2025 7:38PM by PIB Chennai
வரலாற்று சிறப்புமிக்க இந்திய - இங்கிலாந்து விரிவான பொருளாதார மற்றும் வர்த்தக ஒப்பந்தம் [சிஇடிஏ] கையெழுத்தானதைத் தொடர்ந்து, பிரதமர் திரு. நரேந்திர மோடி மற்றும் இங்கிலாந்து பிரதமர் திரு. சர். கீர் ஸ்டார்மர் ஆகியோர் இன்று இந்தியா மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளின் வணிகத் தலைவர்களைச் சந்தித்தனர். சுகாதாரம், மருந்துகள், ரத்தினங்கள் மற்றும் நகைகள், வாகனங்கள், எரிசக்தி, உற்பத்தி, தொலைத்தொடர்பு, தொழில்நுட்பம், ஐடி, தளவாடங்கள், ஜவுளி மற்றும் நிதிச் சேவைகள் துறைகளைச் சேர்ந்த இரு தரப்பிலிருந்தும் முன்னணி தொழில்துறைத் தலைவர்கள் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர். இந்தத் துறைகள் இரு நாடுகளிலும் வேலைவாய்ப்பு உருவாக்கம் மற்றும் உள்ளடக்கிய பொருளாதார வளர்ச்சிக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்குகின்றன.
சமீபத்திய ஆண்டுகளில் இருதரப்பு வர்த்தகம் மற்றும் முதலீட்டு உறவுகளில் ஏற்பட்டுள்ள விரிவாக்கத்தை இரு தலைவர்களும் குறிப்பிட்டனர். வணிகத் தலைவர்களுடன் கலந்துரையாடிய அவர்கள், வர்த்தகம், முதலீடு மற்றும் புதுமை கூட்டாண்மைகளை ஆழப்படுத்துவதற்கான சிஇடிஏவிலிருந்து வரும் வாய்ப்புகளின் முழு திறனையும் உணர அவர்களை ஊக்குவித்தார்கள். மேம்பட்ட இருதரப்பு ஒத்துழைப்பு மூலம் பொருளாதார வளர்ச்சியை இயக்குவதற்கான அவர்களின் பகிரப்பட்ட உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்திய அதே வேளையில், புதிய ஒப்பந்தம் இரு பொருளாதாரங்களிலும் வணிக உணர்வுக்கும் உலகளாவிய பொருளாதார சூழலுக்கும் ஒரு ஊக்கத்தை அளிக்கும் என்று அவர்கள் குறிப்பிட்டனர். சிஇடிஏவின் உறுதியான நன்மைகளை எடுத்துரைத்து, இரு நாடுகளின் முதன்மை தயாரிப்புகள் மற்றும் புதுமைகளின் ஈர்க்கக்கூடிய வரிசையைக் கொண்ட ஒரு காட்சிப் பெட்டியின் வழியாக இரு தலைவர்களும் நடந்து சென்றனர். கண்காட்சிகளில் ரத்தினங்கள் மற்றும் நகைகள், பொறியியல் பொருட்கள், தரமான நுகர்வோர் பொருட்கள் மற்றும் மேம்பட்ட தொழில்நுட்ப தீர்வுகள் ஆகியவை அடங்கும்.
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தத்தை இந்திய-இங்கிலாந்து வணிகத் தலைவர்கள் பாராட்டினர். மேலும், இது விரிவான உத்திசார் கூட்டாண்மையில் ஒரு புதிய சகாப்தத்தை ஏற்படுத்தும் என்றும், வர்த்தகம் மற்றும் பொருளாதாரத்தில் மட்டுமல்லாமல், வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள், கல்வி, புதுமை, ஆராய்ச்சி மற்றும் சுகாதாரத் துறைகளிலும் ஒத்துழைப்பை ஆழப்படுத்தும் என்றும் நம்பிக்கை தெரிவித்தனர்.
புதிய ஒப்பந்தத்தின் திறனைப் பயன்படுத்திக் கொள்வதிலும், வரும் ஆண்டுகளில் பொருளாதார ஒத்துழைப்பின் பிணைப்புகளை ஆழப்படுத்துவதிலும், சிறிய மற்றும் பெரிய வணிகங்களை ஆதரிப்பதிலும் இரு தலைவர்களும் தங்கள் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தினர்.
***
(Release ID: 2147980)
AD/RB/DL
(रिलीज़ आईडी: 2148116)
आगंतुक पटल : 11
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam