தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
மும்பையில் 56-வது ஐஎப்எப்ஐ வழிகாட்டுதல் குழுவின் முதல் கூட்டம்
Posted On:
18 JUL 2025 4:51PM by PIB Chennai
கோவாவில் நடைபெறவுள்ள 56-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவிற்கான வழிகாட்டுதல் குழுவின் முதல் கூட்டம் இன்று மும்பையில் உள்ள தேசிய திரைப்பட மேம்பாட்டுக் கழகத்தின் (என்எப்டிசி) தலைமையகத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ் தலைமை தாங்கினார். தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் செயலாளர் திரு சஞ்சய் ஜாஜு, விழா இயக்குநர் திரு சேகர் கபூர், தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகத்தின் நிர்வாக இயக்குநர் ஸ்ரீ பிரகாஷ் மக்தம், கோவா அரசு, தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் மற்றும் என்எஃப்டிசி-யின் மூத்த அதிகாரிகள் மற்றும் மதிப்புமிக்க வழிகாட்டுதல் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
இந்தக் கூட்டம், இந்திய சர்வதேச திரைப்பட விழா- 2025க்கான திட்டமிடல் குறித்து கவனம் செலுத்தியது. நிகழ்ச்சிகள், வெளிநடவடிக்கை, திறமை, ஈடுபாடு மற்றும் விழாவின் உள்ளடக்கம், உலகளாவிய நிலைப்படுத்தல் மற்றும் பொது ஈடுபாட்டை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட புதுமையான முயற்சிகள் பற்றிய விரிவான விவாதங்கள் நடைபெற்றன. இந்திய சர்வதேச திரைப்பட விழாவின் 56வது பதிப்பு 2025 நவம்பர் 20 முதல் 28 வரை கோவாவில் நடைபெற உள்ளது. இளைஞர்களை மையமாகக் கொண்டு, இந்தத் திரைப்படவிழா, மாணவர் திரைப்பட இயக்குநர்கள் மற்றும் இளம் உள்ளடக்க படைப்பாளர்களுக்கு, தேர்ந்தெடுக்கப்பட்ட மாஸ்டர் வகுப்புகள், பயிலரங்குகள் மற்றும் உலகளாவிய வழிகாட்டிகளுடன் புதிய குரல்களை இணைக்கும் நெட்வொர்க்கிங் தளங்கள் மூலம் புதிய வழிகளைத் திறக்கும்.
விழாவின் வடிவமைப்பில் அதிக உள்ளடக்கம் மற்றும் ஆக்கப்பூர்வமான நுண்ணறிவை மேம்படுத்துவதற்கான ஒரு நடவடிக்கையாக, வழிகாட்டுதல் குழு உறுப்பினர்கள் எண்ணிக்கை 16-லிருந்து 31 ஆக கணிசமாக விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இது மிகவும் மாறுபட்ட மற்றும் தொழில்துறை பிரதிநிதித்துவ அமைப்பை பிரதிபலிக்கிறது. இந்தக் குழுவில் அனுபம் கெர், குணீத் மோங்கா கபூர், சுஹாசினி மணிரத்னம், குஷ்பூ சுந்தர், பங்கஜ் பராஷர் மற்றும் பிரசூன் ஜோஷி போன்றோர் இடம்பெற்றுள்ளனர்.
---
(Release ID: 2145796)
AD/TS/PKV/DL
(Release ID: 2145908)
Read this release in:
Marathi
,
Hindi
,
Malayalam
,
English
,
Urdu
,
Assamese
,
Bengali-TR
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada