மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்
குழந்தைகளின் ஆதார் பயோமெட்ரிக்ஸை புதுப்பிக்குமாறு பெற்றோர்கள் மற்றும் பாதுகாவலர்களை இந்திய தனித்துவ அடையாள ஆணையம் வலியுறுத்தியுள்ளது
Posted On:
15 JUL 2025 5:16PM by PIB Chennai
ஆதாரில் பயோமெட்ரிக் புதுப்பிக்காத ஏழு வயதை அடைந்த குழந்தைகளின் ஆதாரில் பயோமெட்ரிக்ஸைப் புதுப்பிப்பதன் முக்கியத்துவம் குறித்து இந்திய தனித்துவ அடையாள ஆணையம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது. பெற்றோர்கள் அல்லது பாதுகாவலர்கள் தங்கள் குழந்தையின் விவரங்களை எந்த ஒரு ஆதார் சேவை மையம் அல்லது நியமிக்கப்பட்ட ஆதார் மையத்திலும் புதுப்பிக்கலாம்.
5 வயது முதல் 7 வயது வரையிலான உங்கள் குழந்தையின் ஆதார் பயோமெட்ரிக்ஸை இலவசமாகப் புதுப்பித்துக் கொள்ளலாம்.
ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தையின் புகைப்படம், பெயர், பிறந்த தேதி, பாலினம், முகவரி மற்றும் ஆதார ஆவணங்களை வழங்குவதன் மூலம் ஆதாரில் இணைக்கலாம். ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளின் ஆதார் சேர்க்கைக்கு, அவர்களின் கைரேகைகள் மற்றும் கருவிழி பயோமெட்ரிக்ஸ் பதிவு செய்யப்படுவதில்லை, ஏனென்றால் அவை அந்த வயதில் முதிர்ச்சியடையவதில்லை.
தற்போதுள்ள விதிகளின்படி, ஒரு குழந்தை ஐந்து வயதை அடையும் போது, கைரேகைகள், கருவிழி, புகைப்படம் ஆகியவை அவரது ஆதாரில் கட்டாயமாகப் புதுப்பிக்கப்பட வேண்டும். இது முதலாவது கட்டாய பயோமெட்ரிக் புதுப்பிப்பு என்று அழைக்கப்படுகிறது. ஐந்து வயது முதல் ஏழு வயது வரையிலான காலகட்டத்தில் குழந்தையின் கட்டாய பயோமெட்ரிக் புதுப்பிப்புக்கு கட்டணம் ஏதுமில்லை. ஆனால் ஏழு வயதுக்குப் பிறகு நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் 100 ரூபாய் மட்டுமே ஆகும்.
குழந்தைகளின் பயோமெட்ரிக் தரவின் துல்லியம் மற்றும் நம்பகத்தன்மையைப் பராமரிக்க கட்டாய பயோமெட்ரிக் புதுப்பிப்பை சரியான நேரத்தில் செய்வது அவசியமான தேவையாகும். 7 வயதுக்குப் பிறகும் கட்டாய பயோமெட்ரிக் புதுப்பிப்பு செய்யப்படாவிட்டால், தற்போதுள்ள விதிகளின்படி, ஆதார் எண் செயலிழக்கப்படலாம்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பை காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2144893
***
AD/TS/IR/SG/KR/DL
(Release ID: 2144976)
Visitor Counter : 3
Read this release in:
Bengali-TR
,
English
,
Gujarati
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Bengali
,
Punjabi
,
Telugu
,
Kannada
,
Malayalam