பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

திரு ஃபௌஜா சிங் மறைவுக்கு பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார்

இடுகை இடப்பட்ட நாள்: 15 JUL 2025 9:29AM by PIB Chennai

அளப்பரிய ஆளுமையும், அசைக்க முடியாத உணர்வும் கொண்டு பல தலைமுறைகளுக்கு உத்வேகமளித்த திரு ஃபௌஜா சிங் மறைவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று இரங்கல் தெரிவித்துள்ளார். அசைக்க முடியாத உறுதியுடன் மிகச்சிறந்த விளையாட்டு வீரராக திகழ்ந்தவர் அவர் என்று பிரதமர் பாராட்டியுள்ளார்.

சமூக ஊடக எக்ஸ்தளத்தில் அவர் பதிவிட்டிருப்பதாவது:

“ஃபௌஜா சிங் அவர்கள் அசாதாரணமானவராக இருந்தார். ஏனெனில் மிக முக்கியமான உடல்தகுதி குறித்து இந்தியாவின் இளைஞர்களுக்கு அவரது தனித்துவ ஆளுமையும், நடைமுறையும் ஊக்கமளிப்பதாக இருந்தன. அவர் அசைக்க முடியாத உறுதியுடன் மிகச்சிறந்த விளையாட்டு வீரராக திகழ்ந்தவர். அவரது மறைவு எனக்கு வேதனையளிக்கிறது. எனது எண்ணங்கள் அவரின் குடும்பத்தினருடனும் உலகம் முழுவதும் உள்ள எண்ணற்ற ரசிகர்களுடனும் உள்ளன.” 

***

(Release ID: 2144731)

AD/TS/SM/SMB/RJ/KR


(வெளியீட்டு அடையாள எண்: 2144780) வருகையாளர் எண்ணிக்கை : 18