பெட்ரோலியம் மற்றம் இயற்கை எரிவாயு அமைச்சகம்
பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறையில் புதுமை படைக்கும் சீர்திருத்தங்கள்: பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு விதிகள் 2025 துரப்பணம் மற்றும் கட்டமைப்பை நவீனமயமாக்கும் இலக்கை கொண்டுள்ளன
Posted On:
09 JUL 2025 3:30PM by PIB Chennai
பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் எண்ணெய் மற்றும் எரிவாயு தொடர்பான ஆய்வுப் பணிகளை விரைவுபடுத்துவதற்கான நடவடிக்கையின் ஒரு பகுதியாகவும், உற்பத்தியை ஊக்குவிக்கும் தொடர் முயற்சியாகவும் துறை சார்ந்த சீர்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்கு என பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு விதிகள், 2025-க்கான வரைவு விதிகள் உட்பட அனைதது சீர்திருத்த நடவடிக்கைகளும் வர்த்தகம் செய்வதை எளிமைப்படுத்த உதவிடும் என்று மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சர் திரு ஹர்தீப் சிங் பூரி கூறினார். இந்த வரைவு விதிகள், திருத்தியமைக்கப்பட்ட மாதிரி வருவாய் பகிர்வு ஒப்பந்தம் மற்றும் புதுப்பிக்கப்பட்ட பெட்ரோலிய குத்தகை ஒப்பந்தம் ஆகியவை குறித்த தங்களது கருத்துக்களை, தொழில்துறை நிறுவனங்களின் தலைவர்கள், துறை சார்ந்த நிபுணர்கள் மற்றும் பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் இம்மாதம் 17-ம் தேதிக்குள் png-rules@dghindia.gov.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புமாறு அமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார். ஜூலை 17-ம் தேதி புதுதில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் இது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பை காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2143395
-----
VL/TS/SV/KPG/DL
(Release ID: 2143498)
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
Nepali
,
Hindi
,
Bengali-TR
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam