பிரதமர் அலுவலகம்
போர்ட் ஆஃப் ஸ்பெயினில் நடைபெற்ற போஜ்புரி சௌதால் நிகழ்ச்சிக்கு பிரதமர் பாராட்டு
प्रविष्टि तिथि:
04 JUL 2025 9:06AM by PIB Chennai
இந்தியா - டிரினிடாட் & டொபாகோ நாடுகளிடையயே நீடித்த கலாச்சார பிணைப்புகளை எடுத்துக்காட்டும் வகையில், போர்ட் ஆஃப் ஸ்பெயினில் நடைபெற்ற சிறப்பான போஜ்புரி சௌதால் நிகழ்ச்சிக்குப் பிரதமர் திரு.நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சி இரு நாடுகளுக்கும் இடையே, குறிப்பாக, கிழக்கு உத்தரப்பிரதேசம், பீகார் மாநிலங்களின், பல தலைமுறைகளாக செழித்து வளர்ந்து ஆழமாக வேரூன்றியுள்ள போஜ்புரி மரபுகள் மற்றும் உறவுகளை பிரதிபலிப்பதாக உள்ளது.
இது தொடர்பாக சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:
"வேறு எங்கும் இல்லாத ஒரு கலாச்சாரத் தொடர்பு!
போர்ட் ஆஃப் ஸ்பெயினில் நடைபெற்ற போஜ்புரி சௌதால் நிகழ்ச்சியைக் காண்பதில் மிகவும் மகிழ்ச்சி. டிரினிடாட் & டொபாகோ - இந்தியா நாடுகளுக்கு இடையேயான பிணைப்பு, குறிப்பாக கிழக்கு உத்திரப்பிரதேசம், பீகார் மாநிலங்களின் சில பகுதிகளுடனான கலாச்சாரத் தொடர்புகள் குறிப்பிடத்தக்கவை."
-----
(Release ID: 2141999)
AD/TS/SV/KPG/SG
(रिलीज़ आईडी: 2142091)
आगंतुक पटल : 6
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Bengali
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam