பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

பிரதமர் போர்ட் ஆஃப் ஸ்பெயினில் டிரினிடாட் நாட்டைச் சேர்ந்த பாடகர் திரு. ராணா மோஹிப்பை சந்தித்துப் பேசினார்

இடுகை இடப்பட்ட நாள்: 04 JUL 2025 9:42AM by PIB Chennai

போர்ட் ஆஃப் ஸ்பெயினில் நடந்த இரவு விருந்தில், பிரதமர் திரு. நரேந்திர மோடி, சில ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த தினக் கொண்டாட்டங்களின் போது ‘வைஷ்ணவ ஜன தோ’ என்ற பாடலைப் பாடிய டிரினிடாட் நாட்டைச் சேர்ந்த பாடகர் திரு. ராணா மோஹிப்பைச் சந்தித்தார்.

இந்திய இசை மற்றும் கலாச்சாரத்தின் மீதான திரு. மோஹிப்பின் ஆர்வத்திற்குப் பிரதமர் மனதாரப் பாராட்டு தெரிவித்தார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;

"போர்ட் ஆஃப் ஸ்பெயினில் நடந்த இரவு விருந்தில், சில ஆண்டுகளுக்கு முன்பு மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த தினக் கொண்டாட்டங்களின் போது ‘வைஷ்ணவ ஜன தோ’ என்ற பாடலைப் பாடிய திரு. ராணா மோஹிப்பை சந்தித்தேன். இந்திய இசை மற்றும் கலாச்சாரத்தின் மீதான அவரது ஆர்வம் பாராட்டத்தக்கது."

----

(Release ID: 2142002)

AD/TS/SV/KPG/SG  

 

 


(வெளியீட்டு அடையாள எண்: 2142090) வருகையாளர் எண்ணிக்கை : 17