பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

பிரதமர் திரு நரேந்திர மோடி கானா நாடாளுமன்றத்தில் உரையாற்றினார்

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத்தின் பிரதிநிதியாக, 140 கோடி இந்தியர்களின் நல்லெண்ணத்தையும் வாழ்த்துகளையும் நான் என்னுடன் கொண்டு வந்துள்ளேன்: பிரதமர்

உண்மையான ஜனநாயகம் கலந்துரையாடலையும் விவாதத்தையும் ஊக்குவிக்கிறது; அது மக்களை ஒன்றிணைக்கிறது; அது கண்ணியத்தை ஆதரிக்கிறது: மனித உரிமைகளை ஊக்குவிக்கிறது: பிரதமர்

எங்களைப் பொறுத்தவரை, ஜனநாயகம் என்பது வெறும் ஒரு அமைப்பு அல்ல; அது நமது அடிப்படை மதிப்புகளின் ஒரு பகுதியாகும்: பிரதமர்

இந்தியா மற்றும் கானாவின் வரலாறுகள் காலனித்துவ ஆட்சியின் வடுக்களைத் தாங்கியுள்ளன; ஆனால் நமது ஆன்மாக்கள் எப்போதும் சுதந்திரமாகவும் அச்சமற்றதாகவும் இருந்து வருகின்றன: பிரதமர்

இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு உருவாக்கப்பட்ட உலக ஒழுங்கு வேகமாக மாறி வருகிறது; தொழில்நுட்பத்தில் ஏற்பட்டுள்ள புரட்சி, உலகளாவிய தெற்கு நாடுகளின் எழுச்சி, மாறிவரும் மக்கள்தொகை ஆகியவை அதன் வேகத்திற்குப் பங்களிக்கின்றன: பிரதமர்

மாறிவரும் சூழ்நிலைகள் உலகளாவிய நிர்வாகத்தில் நம்பகமான, பயனுள்ள சீர்திருத்தங்களைக் கோருகின்றன: பிரதமர்

உலகளாவிய தென்பகுதி நாடுகள் இல்லாமல் வளர்ச்சியில் முன்னேற்றம் க

Posted On: 03 JUL 2025 6:06PM by PIB Chennai

கானா நாடாளுமன்றத்தின் சிறப்பு அமர்வில் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (03.07.2025) உரையாற்றினார். அந்நாட்டு நாடாளுமன்றத்தில் உரையாற்றிய முதல் இந்தியப் பிரதமராக திரு நரேந்திர மோடி உள்ளார். நாடாளுமன்றத் தலைவர்  திரு அல்பன் கிங்ஸ்ஃபோர்ட் சுமனா பாக்பின் கூட்டிய இந்த அமர்வில், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசு அதிகாரிகள், இரு நாடுகளைச் சேர்ந்த சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்டனர். இந்த உரை இந்தியா-கானா உறவுகளில் ஒரு குறிப்பிடத்தக்க தருணத்தைக் குறிப்பதாக அமைந்தது. இரு நாடுகளையும் ஒன்றிணைக்கும் பரஸ்பர மரியாதை மற்றும் பகிரப்பட்ட ஜனநாயக விழுமியங்களை இது பிரதிபலித்தது.

பிரதமர் தமது உரையில், சுதந்திரத்திற்கான பகிரப்பட்ட போராட்டங்கள், ஜனநாயகம், அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கான பொதுவான அர்ப்பணிப்பு ஆகியவற்றின் மூலம் ஏற்பட்டுள்ள இந்தியாவிற்கும் கானாவிற்கும் இடையிலான வரலாற்று பிணைப்புகளை எடுத்துரைத்தார். தமக்கு வழங்கப்பட்ட தேசிய விருதிற்காக கானா அதிபர் திரு ஜான் டிராமணி மகாமா மற்றும் கானா மக்களுக்கு அவர் நன்றி தெரிவித்தார். இது நீடித்த நட்பின் சின்னம் என்று அவர் கூறினார். கானாவின் சிறந்த தலைவர் டாக்டர் குவாமே நக்ருமாவின் பங்களிப்புகளை பிரதமர் எடுத்துரைத்தார். ஒற்றுமை, அமைதி, நீதி ஆகியவற்றின் லட்சியங்களின்  வலுவான அடித்தளமாக இருதரப்பு ஒத்துழைப்புகள் உள்ளன என்று அவர் கூறினார்.

"நம்மை ஒன்றிணைக்கும் சக்திகள் உள்ளார்ந்தவை என்று ஒருமுறை டாக்டர் நக்ருமா கூறியதை பிரதமர் மேற்கோள் காட்டினார்.  ஜனநாயக அமைப்புகளின் நீண்டகால தாக்கம் குறித்து பேசிய பிரதமர், ஜனநாயக விழுமியங்களை வளர்ப்பதன் முக்கியத்துவத்தை சுட்டிக் காட்டினார். ஜனநாயகத்தின் தாயாக இந்தியா அதன் கலாச்சாரத்தின் ஒரு பகுதியாக ஜனநாயக நெறிமுறைகளை ஏற்றுக்கொண்டதைக் குறிப்பிட்ட பிரதமர், இந்தியாவில் ஜனநாயகத்தின் ஆழமான, துடிப்பான வேர்கள் உள்ளதை எடுத்துரைத்தார். இந்தியாவின் பன்முகத்தன்மையும் ஜனநாயக வலிமையும், கானாவின் ஜனநாயகப் பயணத்திலும் இருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார். பருவநிலை மாற்றம், பயங்கரவாதம், தொற்றுநோய்கள், இணையதள அச்சுறுத்தல்கள் போன்ற உலகளாவிய சவால்களையும் அவர் எடுத்துரைத்தார். உலகளாவிய நிர்வாகத்தில் உலகளாவிய தெற்கு நாடுகளின் குரலுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.  இந்தச் சூழலில், இந்தியாவின் ஜி20 தலைமைத்துவ காலத்தில் ஆப்பிரிக்க யூனியன் நிரந்தர உறுப்பினராக சேர்க்கப்பட்டதை அவர் சுட்டிக் காட்டினார்.

கானாவின் துடிப்பான நாடாளுமன்ற அமைப்பைப் பாராட்டிய பிரதமர், இரு நாடுகளின் நாடாளுமன்றங்களுக்கிடையில் வளர்ந்து வரும் பரிமாற்றங்கள் தொடர்பாக திருப்தி தெரிவித்தார். இந்தச் சூழலில், கானா-இந்தியா நாடாளுமன்ற நட்புறவு சங்கம் நிறுவப்பட்டதை அவர் வரவேற்றார். 2047-ம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ச்சியடைந்த நாடாக மாற்றுவதற்கான இந்திய மக்களின் உறுதியை வெளிப்படுத்திய பிரதமர், கானாவின் முன்னேற்றம் மற்றும் செழிப்புக்கு ஆதரவு அளிப்பதிலும் அந்நாட்டுடன் இந்தியா துணை நிற்கும் என்று குறிப்பிட்டார்.

***

(Release ID: 2141873)

AD/TS/PLM/KPG/KR/DL  


(Release ID: 2141915) Visitor Counter : 2